ரூபேவின் அசுர வளர்ச்சி.. மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசாவும் அமெரிக்க அரசாங்கத்திடம் ரூபே மீது புகார்..

இந்தியாவின் ரூபே கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் மாஸ்டர் கார்டை தொடர்ந்து தற்போது விசா கார்டும் அமெரிக்காவிடம் ரூபே மீது புகார் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 9 ஆம் தேதி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) கேத்தரின் டாய் மற்றும் CEO ஆல்பிரட் கெல்லி உள்ளிட்ட நிருவன நிர்வாகிகளுக்கு இடையே நடந்த கூட்டத்தின் போது இந்தியாவின் ரூபே கார்டு பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபே கார்டின் வளர்ச்சியால் தங்களது நிறுவனம் பாதிக்கப்படுவதாகவும் விசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு மாஸ்டர் கார்டு நிறுவனம் இந்தியாவின் ரூபே கார்டு மற்றும் நரேந்திர மோடி மீதும் புகார் தெரிவித்து இருந்தது. அதில் பிரதமர் மோடி ரூபே கார்டை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் அவர் செல்லும் இடமெல்லாம் ரூபே கார்டை பயன்படுத்தி பணம் செலுத்திகிறார்.

எல்லோரும் நாட்டை பாதுகாக்க எல்லைக்கு செல்ல முடியாது என்பதால் தேசத்திற்கு சேவை செய்ய ரூபே அட்டையை பயன்படுத்தலாம் என மோடி தெரிவித்தார். ரூபே கார்டின் பயன்பாட்டால் மாஸ்டர் கார்டுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாஸ்டர் கார்டு நிறுவனம் கூறியிருந்தது.

தற்போது விசா Inc நிறுவனமும் அதே புகாரை தெரிவித்துள்ளது. ரூபேவின் முறைசாரா மற்றும் முறையான ஊக்குவிப்பு அமெரிக்க நிறுவனத்தை காயப்படுத்துவதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பணம் செலுத்தும் சந்தையிஸ்ல் மாஸ்டர் கார்டு மற்றும் விசாவிற்கு எதிராக ரூபே கார்டை மோடி பல வருடமாக பிரபலபடுத்தி வருகிறார்.

இந்தியாவில் நவம்பர் 2020 ஆம் ஆண்ட்ந் நிலவரப்படி, 952 மில்லியன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. அவற்றில் 63 சதவீதம் ரூபே கார்டு ஆகும். 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி ரூபே கார்டின் பயன்பாடு வெறும் 15 சதவீதமாக இருந்தது. கடந்த மே மாதம் ரூபே போன்ற கார்டுகள் விசாவிற்கு சாத்தியமான பிரச்சனையாக இருக்கலாம் எனவும் இது அதிக கவலையை ஏற்படுத்துவதாக கெல்லி கூறினார்.

Also Read: இந்தியா ஏற்றுமதியில் இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டும்: வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்

இருப்பினும் தனது நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணியில் இருப்பதாக கெல்லி கூறினார். கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வங்கிகள் ரூபே அட்டையை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்தியாவில் எண்ணிக்கையில் ரூபே ஆதிக்கம் செலுத்தினாலும், பெரும்பாலான வர்த்தகம் மாஸ்டர் கார்டு மற்றும் விசா வழியாகவே செல்வதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Also Read: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.25 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடிக்கு நஷ்டம்..?

2018 ஆம் ஆண்டு மாஸ்டர் கார்டு நிறுவனம் இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும், அதற்காக ஒரு தரவு மையத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும் என மத்திய வங்கி உத்தரவிட்டது. ஆனால் அதனை மாஸ்டர் கார்டு நிறுவனம் நிறைவேற்றாததால் புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மோடியின் ரூபே பயன்பாடு பிரச்சாரத்தால் மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் புலம்பி வருகின்றன.

Also Read: அக்டோபரில் GST வரி வருவாய் 1.30 லட்சம் கோடியை கடந்து சாதனை.. வளர்ச்சியில் பின்னோக்கி தமிழகம்..

Leave a Reply

Your email address will not be published.