ஒப்பந்தம் செய்யப்பட்ட AK-203 துப்பாக்கிகளை இந்தியாவிற்கு அனுப்பியது ரஷ்யா..?

இந்தியாவிற்கும் ரஷ்யாவின் மைக்கேல் கலாஷ்னிகோவிற்கும் இடையே கடந்த வருடம் AK-203 தாக்குதல் துப்பாக்கி வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, முதல் தொகுதியாக 70,000 AK-203 துப்பாக்கிகளை ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 670,000 AK-203 தாக்குதல் துப்பாக்கிகளை வாங்க முடிவு செய்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த முதல் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்திலான 2+2 சந்திப்பு நடைபெற்றது. அதேபோல் டிசம்பர் மாதம் இந்திய-ரஷ்ய ஆண்டு உச்சி மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புதின் வருகை தந்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது 670,000 AK-203 துப்பாக்கி ஒப்பந்தமும் கையெழுத்தானது. முதல் 70,000 துப்பாக்கிகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யவும், மற்ற 6,00,000 துப்பாக்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்தோ-ரஷியன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) என்ற கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. எதிர்காலத்தில் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் முழுமையான தொழிற்நுட்ப பரிமாற்ற விதிகளுடன் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த துப்பாக்கியை அட்வான்ஸ்டு வெபன்ஸ் & எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (AWEIL), ம்யூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (MIL) மற்றும் ரஷியன் ரோசோபோரோனெக்ஸ்போர்ட் ஆகியவற்றால் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்காக அமேதியில் உள்ள கோர்வா ரைபிள் தொழிற்சாலை நவீன தயாரிப்பு வசதியுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

டிசம்பர் 6 ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தம் 5,124 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றுநோய் இருந்தபோதும் இந்த வார துவக்கத்தில் துப்பாக்கி திட்டமிட்டப்படி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

AK-203 தாக்குதல் துப்பாக்கி மைக்கேல் கலாஷ்னிகோவ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. துப்பாக்கி 7.62 x 39 மிமீ காலிபர், 3.8 கிலோ எடை, 940 மிமீ நீளம், நிமிடத்திற்கு 700 சுற்றுகள், விநாடிக்கு 730 மீட்டர் வேகம் மற்றும் 800 மீட்டர் தாக்குதல் தூரத்தை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.