இந்தியாவிற்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு..

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன, இந்த நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணையை வழங்க முன்வந்துள்ளது.

இந்தியா தற்போது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. சர்வதேச அழுத்தம் மற்றும் தடைகளை மீறி ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட 15 மில்லியன் பீப்பாய்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது.

தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 107 டாலராக உள்ளது. இது போருக்கு முன்னர் 97 டாலராக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளதால் ரஷ்யா ஆசியாவில் அதன் கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது.

Also Read: முதன்முறையாக ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்து சாதனை..! பிரதமர் மோடி வாழ்த்து..!

டாலருக்கு பதிலாக ரஷ்யாவின் மேசேஜிங் சிஸ்டம் SPFS-யை பயன்படுத்தி இருநாட்டு நாணயமான ரூபாய்-ரூபிள் பரிவர்த்தனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது இந்தியாவிற்கு வர்த்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.

ரஷ்யா வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வரும் நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நாட்டின் மேற்கில் உள்ள பால்டிக் கடலில் இருந்து கப்பல் போக்குவரத்து தடைகளை தவிர்ப்பதற்காக தூர கிழக்கில் உள்ள ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகம் வழியாக எண்ணெயை கொண்டு செல்வது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

Also Read: ரஷ்யா உக்ரைன் போர்: உலக கோதுமை சந்தையை பிடிக்க இந்தியா முயற்சி.. எகிப்துடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை..

அங்கிருந்து கச்சா எண்ணெய் இந்தியாவின் கிழக்கு கடற்கரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 20 நாட்களுக்குள் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் ஆயுத கொள்முதலால் உருவாக்கப்பட்ட அதன் வர்த்தக இடைவெளியை குறைக்க, ரஷ்யாவிற்கு மருந்துகள், பொறியியல் மற்றும் இரசாயனங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.