ரஷ்யா உக்ரைன் மோதல்: கிடப்பில் போடப்பட்ட Su-30 MKI போர் விமான திட்டம்..

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானத்தை மேம்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் 12 அதிநவீன Su-30 MKI போர் விமானத்திற்கான ஒப்பந்தமும் தாமதமாகும் என கூறப்படுகிறது.

இந்திய விமானப்படை மற்றும் கடற்படையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படை ரஷ்ய மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உடன் இணைந்து 85 போர் விமானங்களை தற்போதைய தரத்திற்கு ஏற்றார்போல் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் நடைபெற்று வருவதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 20,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 12 அதிநவீன Su-30 MKI போர் விமானங்களுக்கான ஒப்பந்தமும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதற்கு தற்போது நடைபெறும் போர் மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையின் படி, Su-30 MKI போர் விமானத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தை அதிகம் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் ஒப்பந்தம் தாமதமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மேம்படுத்த உள்ள 85 Su-30 MKI போர் விமானங்களில் மிகவும் சக்திவாய்ந்த ரேடார்கள், சமீபத்திய எலக்ட்ரானிக் போர் திறன்களை பொருத்துவது மற்றும் சமீபத்திய தரநிலைகளின் படி விமானத்தை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றுவது உள்ளிட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருந்தன.

Also Read: காஷ்மீரின் குல்காமில் LeT அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..

Su-30 MKI இந்திய விமானப்படையின் முக்கிய அங்கமாக உள்ள நிலையில், அவற்றில் 272 போர் விமானங்கள் சேவையில் உள்ள ஒவ்வொரு முறையும் உதிரிபாக பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இதன் மூலம் ரஷ்ய உற்பத்தியாளர்கள் 30 முதல் 40 ஆர்டர்களை பெறுவார்கள். இந்த நிலையில் ரஷ்ய உற்பத்தியாளர்களால் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அரை மற்றும் முழுமையான நாக்-டவுன் கருவிகளாக விமானங்கள் வழங்கப்படுகின்றன.

பின்னர் அவை நாசிக்கில் உள்ள மையத்தில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் நடைபெற்று வருவதால் கடற்படை போர் விமானத்திற்கான உதிரிபாகங்கள் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் சீனா உடனான மோதலுக்கு பிறகு கணிசமான அளவு உதிரிபாகங்களை கையிருப்பில் வைத்துள்ளது.

Also Read: டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்..? உளவுத்துறை எச்சரிக்கை..

ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு உதிரிபாகங்கள் மற்றும் பிற உபகரணங்கள் விநியோகம் ஒரு பிரச்சனையாக மாறக்கூடும் என்பதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பாகங்களை கொண்டே போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டத்தை பாதுகாப்புத்துறை முன்னெடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் முடிந்த பிறகு இதற்கான வேலை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.