ரஷ்யா உக்ரைன் போர்: உலக கோதுமை சந்தையை பிடிக்க இந்தியா முயற்சி.. எகிப்துடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை..

எகிப்துக்கு கோதுமை ஏற்றுமதியை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் சீனா, துருக்கி, ஈரான், போன்ற மற்ற நாடுகளுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உலக நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்படுவது தடை பட்டுள்ளது. ஏனெனில் உலகின் கோதுமை ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா 80 சதவீத பங்குகளை வைத்துள்ளன. உலக கோதுமை சந்தையை பிடிக்க தற்போது இந்தியா மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2021-22 ஏப்ரல்-ஜனவரி மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 1.74 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 340.17 மில்லியன் டாலராக இருந்தது. 2019-20 ஆம் ஆண்டில் கோதுமை ஏற்றுமதி 61.84 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் 549.67 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

Also Read: கூகுள் பே, PAYTM, போன் பேவிற்கு மாற்றாக UPI செயலியை துவக்க உள்ள டாடா..?

இந்தியா ஆண்டுதோறும் 107.59 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது. உற்பத்தியில் உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா. மத்தியபிரதேசம், பீகார், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முன்னணி வகிக்கின்றன. இருப்பினும் உற்பத்தியில் பெரும்பகுதி உள்நாட்டு நுகர்வுக்கு சென்றுவிடுகிறது.

ஏற்றுமதியில் மற்ற நாடுகளின் கோதுமையை விட இந்தியாவின் கோதுமை விலை சற்று அதிகமாக இருப்பதால் ஏற்றுமதியில் பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் பங்களாதேஷ் 50 சதவீத பங்கை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து நேபாளம், UAE. இலங்கை, ஏமன், ஆப்கானிஸ்தான், கத்தார், இந்தோனேசியா, ஓமன் மற்றும் மலேசியா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Also Read: ஆப்பிளின் iOS மற்றும் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக சொந்தமாக OS உருவாக்க உள்ள இந்தியா..?

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளர் இடத்தை பிடிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. கோதுமை ஏற்றுமதி தொடர்பாக இந்தியா எகிப்து நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்து ஆர்டர் கிடைக்கும் பட்சத்தில் கோதுமையை ஏற்றுமதி செய்யப்படும்.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) சமீபத்தில், உலகளாவிய கோதுமை விநியோக சங்கிலி சீர்குலைவு காரணமாக ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான முக்கிய பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Also Read: கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்ய இந்தியாவிற்கு ரஷ்யா அழைப்பு..?

எகிப்து உடனான பேச்சுவார்த்தை முடிந்து ஆர்டர் கிடைக்கும் பட்சத்தில் ஏற்றுமதியை விரைவுபடுத்த ரயில்வே பிரத்யேக கண்டெய்னர்களுடன் தயாராக இருப்பதாகவும், கண்டெய்னர்களை அதிகரிக்கவும் துறைமுக அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். உலகின் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் 80 சதவீத பங்கை கொண்டுள்ளன. இந்தியா 1 சதவீதத்திற்கும் குறைவாகவே ஏற்றுமதி செய்கிறது. ஆனால் கோதுமை உற்பத்தியில் இந்தியா 14.14 சதவீதத்துடன் உலகின் இரண்டாவது நாடாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.