உக்ரைன் சரணடைந்த உடன் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தும்: கிரெம்ளின்
உக்ரைன் தனது துருப்புகளை ஆயுதங்களை கீழே போடுமாறு கிரெம்ளின் கூறிய நிலையில், உக்ரைன் சரணடைந்த உடன் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தும் என தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைன் தரப்பு இன்று முடிவதற்குள் அனைத்தையும் நிறுத்த முடியும் என தெரிவித்துள்ளார். தேசியவாத பிரிவுகள் ஆயுதங்களை கீழே போடுவதற்கு உத்தரவு அவசியம் என கூறிய டிமிட்ரி, மாஸ்கோவின் கோரிக்கைகளின் பட்டியலை உக்ரைன் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அறிக்கை குறித்து பேசிய டிமிட்ரி, எங்கள் ஜனாதிபதி அறிக்கைகளால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம், சிறப்பு இராணுவ நடவடிக்கை திட்டத்தின்படி நடக்கிறது மற்றும் அதன் இலக்குகளை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
லிசிசான்ஸ்கு நகரத்தை பாதுகாத்து வரும் லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே கூறுகையில், பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு நகரத்தில் 95,000 மக்களில் சுமார் 15,000 பேர் மட்டுமே எஞ்சி இருப்பதாக தெரிவித்துள்ளார். லுகான்ஸ்க் பகுதி மொத்த அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களுக்கு ஏற்பட்ட சேதம் பேரழிவு தரக்கூடியது என தெரிவித்துள்ளார்.
Also Read: ஈரானில் ஸ்கேட்போர்டிங் நிகழ்வில் ஹிஜாப் அணியாத பெண்கள், சிறுமிகளை கைது செய்த போலிசார்..
லுகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பிராந்தியங்களால் ஆன உக்ரேனின் கிழக்கு டோன்பாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக லிசிச்சான்ஸ்க் பகுதியை கைப்பற்ற ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. வாரக்கணக்கான சண்டைக்கு பிறகு லிசிச்சான்ஸ்க்கின் இரட்டை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.