ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது: ஜோ பிடன்

உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்திய நிலையில், அதனை இடைமறிப்பது சாத்தியமற்றது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா 2017 ஆம் ஆண்டில் கின்ஜால் அணுசக்தி திறன் கொண்ட நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பை செயல்படுத்திய பின்னர் முதல் நாடாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிய நாடு என்ற பெருமையை பெற்றது. சீனாவும் DF-ZF ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனத்தை உருவாக்கி சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

அமெரிக்காவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வரும் நிலையில் இன்னும் முழுமையாக படையில் இணைக்கவில்லை. சில நாட்களுக்கு முன் ரஷ்யா கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைனின் ஆயுத கிடங்கை அழித்தது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறுகையில், ரஷ்யா அவர்களின் உத்திகளை செயல்படுத்த முடியாததால் உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியது. உக்ரைனில் ரஷ்ய படைகளின் இழப்புகள் காரணமாக ரஷ்யா அவ்வாறு செய்ததாக பிடன் தெரிவித்தார்.

Also Read: அர்ஜுன் MK-II டாங்கியை வாங்க பஹ்ரைன் ஆர்வம்..? இந்தியாவுடன் பேச்சுவார்த்தை..!

திங்கள் கிழமை வரை, ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைனின் ஆயுத கிடங்கை அழித்ததற்கான எந்த துப்பும் அல்லது உறுதிப்படுத்தலும் இல்லை என கூறிய பிடன், பிற்பகுதியில் ரஷ்ய படைகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியதை பிடன் உறுதிப்படுத்தினார். அதை நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதை தவிர இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. அவர்கள் அதை பயன்படுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது என பிடன் கூறினார்.

மேற்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்கு மற்றும் எரிபொருள் கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு ஜோடி கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Also Read: உக்ரைன் மீது முதன்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..?

MiG-31K ஜெட் விமானங்கள் அல்லது Tu-22 மற்றும் Tu-160 குண்டு வீச்சு விமானங்களில் இந்த ஏவுகணைகளை கொண்டு செல்லலாம். கின்சால் மணிக்கு 2,000 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் மற்றும் இதன் அதிகப்பட்ச வேகம் மேக் 12, அதாவது மணிக்கு 14,700 கிலோமீட்டர் வரை செல்லும். இது விமானத்தில் சூழ்ச்சி செய்யும் திறனை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தியும் இதனை இடைமறிக்க இயலாது.

Leave a Reply

Your email address will not be published.