ரஷ்ய அதிபர் புதின் வருகையின் போது S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பு கையெழுத்தாக வாய்ப்பு..?

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த மாதம் 6 ஆம் தேதி இந்தியா வர உள்ள நிலையில் S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 வான்பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ளது. முதல் ஏவுகணை அமைப்பு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அதே S-400 அமைப்பு சீனாவிடமும் உள்ளது.

இதனால் S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. சீனாவும் S-500 ஏவுகணை அமைப்பை வாங்க ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மோடி மற்றும் புதின் இடையே முடிவு எட்டப்பட்டால் S-500 ஏவுகணை அமைப்பை வாங்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும்.

சாட்டிலைட்டை தாக்கி அழித்து S-500 ஏவுகணை அமைப்பை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இருப்பினும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் S-550 ஏவுகணை அமைப்பை சோதனை செய்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் செர்ஜி ஷோய்கு நவம்பர் 9 அன்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

S-500 ப்ரோமிதியஸ் ஏவுகணை அமைப்பானது தரையில் இருந்து வான் நோக்கி சென்று தாக்கும் மொபைல் ஏவுகணை அமைப்பாகும். இந்த ஏவுகணை அமைப்பை ரஷ்யா இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. S-500 ஏவுகணை அமைப்பானது 600 கிலோமீட்டர் தாக்குதல் தூரத்தை கொண்டுள்ளது. விநாடிக்கு 7 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த S-500 ஏவுகணை அமைப்பு கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணையை தாக்கி அழிக்கக்கூடியது. பல்வேறு நாடுகளால் உருவாக்கப்பட்டு வரும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இந்த S-500 ஏவுகணை அமைப்பை Almaz-Antey Air Defence Concern நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ரஷ்ய ஆய்வாளர்கள் கூறுகையில், போர்கப்பல் ஏவுகணை மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தவிர குறைந்த சுற்றுவட்டப்பாதையில் உள்ள சாட்டிலைட்களையும் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களையும் தாக்கி அழிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது.

Also Read: திபெத் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துவரும் சீனா.. சாட்டிலைட் புகைப்படம் வெளியானது.

S-550 ஏவுகணை அமைப்பானது பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை(ABM) மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) தாக்கி அழிக்கும் விண்வெளி எதிர்ப்பு அமைப்பாகும். தற்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் ICBM ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு உள்ளது. ஆனால் அவை எல்லாம் மொபைல் ஏவுகணை அமைப்பு கிடையாது. மாறாக அவை குழிகளை அடிப்படையாக கொண்டவை.

ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், S-550 அமைப்பானது ஏவுகணை எதிர்ப்பு மற்றும் விண்வெளி எதிர்ப்பு பாதுகாப்பு பணிகளில் நிபுணத்துவம் பெற்றது என கூறப்பட்டுள்ளது. S-500 ஏவுகணை அமைப்பை வாங்க துருக்கி மற்றும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் துணை பிரதமர் யூரி போரிசோவ் கூறுகையில், இந்தியா வருங்கால S-500 வாடிக்கையாளராக இருக்கலாம் என கூறியுள்ளார்.

Also Read: இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தில் ஹம்மர் ஏவுகணை.. சீன எல்லையில் நிலைநிறுத்த முடிவு..

ரஷ்ய அதிபர் புதின் கடைசியாக 2018 ஆம் ஆண்டு இந்தியா வந்தார். 2020 ஆம் ஆண்டு இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தடைப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி புதின் டெல்லி வருவதாக கூறப்பட்டுள்ளது. சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், அறிவியல், பாதுகாப்பு, தொழிற்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: சோதனைக்கு தயாராகும் இந்தியாவின் புதிய தேஜஸ் MK-2 போர் விமானம்..

Leave a Reply

Your email address will not be published.