பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவுக்கு சமாஜ்வாதி MP ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு..

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். பழைய நடவடிக்கையே தொடர வேண்டும் எனவும் சரியான காரணம் இல்லாமல் இதனை ஏற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த ரஹ்மான், இத்தகைய சட்டம் அவர்களை சுதந்திரமாக மாற்றும் என்ற வாதத்தை நிராகரித்தார். மேலும் அவர்களை ஏன் சுதந்திரமாக மாற்ற விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இளம் வயதில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அவர்கள் முரட்டு தனமாக நடந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் பெண்களுக்கு மோசமான சூழல் நிலவுவதாகவும், அதனால் அவர்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.பெண்கள் குடும்பங்களுக்கு ஒரு பொறுப்பு என குறிப்பிட்ட ரஹ்மான், பெண் குழந்தைகள் பிறந்த உடன் ஏழைகள் அவர்களை சுமையாக நினைப்பதாகவும், அதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்குவதாகவும் கூறியுள்ளார்.

நாட்டில் மோசமான சூழல் நிலவுவதால் எங்கள் பிள்ளைகளுக்கு எந்த தவறும் நடக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள ஏழை மக்களின் ஒரே ஆசை அவர்கள் விரைவாக திருமணம் செய்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது தான். பெண்களுக்கு 18 வயதிற்குள் திருமணம் ஆகிவிட்டால் அவர்களை வளர்க்கும், படிக்க வைக்கும் பொறுப்பில் இருந்து பெற்றோர்களும் விலகுவார்கள் என ரஹ்மான் கூறியுள்ளார்.

Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..

திருமணதிற்கு பிறகு பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். அதே வேளையில் அவர்கள் தங்கள் மாமியாருடன் வாழ்ந்து கௌண்டே படிப்பை தொடரலாம். திருமணத்திற்கு பிறகு படிப்பை தொடர வேண்டுமா என்பதை அவர்கள் முடிவு செய்யலாம். அவர்களின் மாமியார் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் குழந்தைகளை மேலும் படிக்க வைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Also Read: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 37 வங்கதேசத்தினரை கைது செய்த உ.பி. போலிசார்..

நாட்டில் பெரும் பகுதியினர் ஏழை என்பதால் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால் சிக்கல் ஏற்படும். சரியான காரணம் கூறும் வரை இந்த நடவடிக்கையை நாங்கள் ஏற்கமாட்டோம். திருமண வயதை உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தால் அதனை எதிர்ப்பேன் என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Also Read : அன்னை தெரேசா சிறுமிகள் காப்பகத்தில் மதமாற்றம்.. வழக்கு பதிவு செய்தது குஜராத் காவல்துறை..

புதன்கிழமை அன்று பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிபுணர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் இந்த முடிவால் நேரடியாக பாதிக்கப்படுபவர்களின் ஆலோசனை அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2020 ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி திருமண வயது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.