ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமல்படுத்த இந்தியாவை கட்டாயப்படுத்தவில்லை: அமெரிக்கா
ரஷ்யா உக்ரைன் மோதலால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமல்படுத்த இந்தியாவை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மையம் ஏற்பாடு செய்த சிந்தனை குழு மையத்தில் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடு, அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுப்பார்கள். அவர்களுக்கு விரிவுரை செய்யவோ அல்லது ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க கட்டாயப்படுத்தவோ நாங்கள் இங்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை விமர்சிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பின் போது இந்தியா அதனை புறக்கணித்தது. பிப்ரவரியில் படையெடுப்பை அடுத்து ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்த தடைகளுக்கு இந்தியா கையெழுத்திடவில்லை. ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
ரஷ்யா உக்ரைன் மோதலில் இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருவதால், இந்தியா உடனான உறவில், நாங்கள் இங்கே நீண்ட விளையாட்டை விளையாடுகிறோம். நாங்கள் ஒரு உறவில் முதலீடு செய்கிறறோம், நாங்கள் ஒரு பிரச்சனையால் தீர்மானிக்க போவதில்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
Also Read: பிரான்ஸ் நாட்டில் விரைவில் இந்தியாவின் UPI மற்றும் Rupay சேவை.. அமைச்சர் அறிவிப்பு..
ரஷ்யா உடனான இந்தியாவின் வரலாற்று உறவுகளை புரிந்து கொள்வதாகவும், ரஷ்யா உடனான தனது உறவுகளை இந்தியா துண்டிப்பது எவ்வளவு கடினமாக இரூக்கும் என்பதையும் அமெரிக்கா அடிக்கடி ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் ஜோ பிடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான வழக்கமான தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Also Read: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக உருமாறிய ரஷ்யா..?
இரண்டு வாரங்களுக்கு முன்பு டோக்கியோவில் இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பையும் சல்லிவன் குறிப்பிட்டார். சீனா உடனான உறவில் இருநாடுகளும் ஒற்றுமையை கொண்டிருக்கின்றன. ஆனால் ரஷ்யா உடனான உறவில், எங்களிடம் வெவ்வேறு வரலாற்று கண்ணோட்டங்கள் மற்றும் நினைவுகள் உள்ளன. ஆனால் நாம் இப்போது இந்தியாவுடன் மேற்கொள்ளும் உரையாடல் காலப்போக்கில் பலனை தரும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
Also Read: சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக ஈரான் வழியாக இந்தியாவிற்கு சரக்குகளை அனுப்பும் ரஷ்யா..?