தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..
தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. தப்ளிக் ஜமாத் குழுவிற்கும் அதன் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் தவறான வழிகாட்டுதலுக்கும் எதிராக மக்களை எச்சரிக்குமாறு சவுதி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் போது மசூதிகளின் போதகர்கள் நான்கு முக்கிய விசயங்களை பற்றி பேச வேண்டும் என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லதீப் அல்-ஷேக் திங்கள் கிழமை அமைச்சகம் சார்பில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தப்ளிக் மற்றும் தாவா குழு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் நான்கு முக்கிய விஷயங்களை பற்றி பேச வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக இந்த குழுவின் தவறான வழிகாட்டுதல், விலகல் மற்றும் ஆபத்து பற்றிய அறிவிப்பு. மேலும் அவர்கள் வேறுவிதமாக கூறினாலும் அது பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது.
இரண்டாவதாக தப்ளிக் மற்றும் தாவா குழுக்களின் மிக முக்கியமான தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மூன்றாவதாக சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நான்காவதாக சவுதி அரேபியாவில் தப்ளிக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுப்பாடான குழுக்களுடன் இணைந்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது என அந்த ட்விட்டில் கூறப்பட்டுள்ளது.
Also Read: பாகிஸ்தானில் இலங்கை நபரை கொன்று உடலை எரித்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு..
தப்ளிக் ஜமாத் அமைப்பு 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இது ஒரு மரபு வழி மிஷினரி இயக்கம் ஆகும். அந்த அமைப்பின் அறிக்கையின் படி, இஸ்லாமியர்கள் குறிப்பாக சடங்குகள், உடை மற்றும் தனிப்பட்ட அளவில் நடத்கை விஷயங்களில் மதத்தை பின்பற்றுமாறு கூறுகிறது. இந்த தப்ளிக் ஜமாத் குழுவில் உலகம் முழுவதும் 350 முதல் 400 மில்லியன் உறுப்பினர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
Also Read: நாட்டை நடத்துவதற்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.. மாநாட்டில் குமுறிய இம்ரான்கான்..
இவர்கள் தங்கள் மதத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். அரசியல் மற்றும் விவாதங்களை கண்டிப்பாக தவிர்க்கிறார்கள். இந்த தப்ளிக் ஜமாத் குழு டெல்லியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிஜாமுதீன் மார்க்கஸ் மசூதியில் ஒரு மத சபையை ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்திற்கு மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா, கிர்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொரோனா விதிகளை மீறி நடத்திய இந்த கூட்டத்தில் இருந்து தான் கொரோனா பரவியதாக அப்போது சர்ச்சை வெடித்தது.
Also Read: பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாலிபான் தாக்குதல். இரண்டு வீரர்கள் பலி..