பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானுக்கு 4.2 பில்லியன் டாலர் கடன் உதவி வழங்க உள்ள சவுதி அரேபியா..?

பணப்பற்றாக்குறையில் இருக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் சவுதி அரேபியா 4.2 பில்லியன் டாலர் அளவிலான கடன் உதவியை அளிக்க முன்வந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. அதன் ரூபாயின் மதிப்பும் கடந்த மே மாதம் 13.6 சதவீதம் சரிவடைந்தது. மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக கூறி நிதி கண்காணிப்பு குழு (FATF) பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் உலகவங்கி, IMF உட்பட எந்த நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பாகிஸ்தானில் செலவீனங்கள் குறைக்கப்பட்டு பல அரசு அலுவலகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மேலும் அரசுக்கு சொந்தமான பூங்காக்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரியாத்தில் நடைபெற்ற MGI மாநாட்டின் போது சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பிறகு பாகிஸ்தானிற்கு நிதி உதவி வழங்க ஒப்புகொண்டதாக சவுதி அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார். இக்கட்டான காலங்களில் சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு உற்ற நண்பனாக இருக்கிறது என இம்ரான்கான் தெரிவித்தார்.

Also Read: சீனாவுக்கு தடை.. இந்தியாவுக்கு அனுமதி.. இலங்கைக்கு கண்டனம் தெரிவித்த சீனா..

சவுதி அரேபியா வழங்க உள்ள 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனில் 3 பில்லியன் டாலர் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் டெபாசிட் செய்யப்படும். மீதமுள்ள 1.2 பில்லியன் டாலர் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஆண்டு முழுவதும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு டாலரின் கையிருப்பு குறைந்ததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க டாலர்கள் ஆப்கானிஸ்தானிற்கு கடத்தப்படுகிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் அரசு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன் படி ஆப்கனுக்கு பயணம் செய்வோர் வருடத்திற்கு 6,000 டாலர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தனி நபருக்கு 1,000 டாலர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

Also Read: அதல பாதாளத்திற்கு செல்லும் பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு.. வரலாறு காணாத வீழ்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.