ஜெய் ஶ்ரீராம் என எழுதியதற்காக நான்காம் வகுப்பு மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்..

ஜூலை 9 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் கிரிதிய்ல அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் கரும்பலகையில் ஜெய் ஶ்ரீராம் என எழுதியதற்காக பள்ளி தலைமை ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கிரிதியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி பால்மோ (UGMSP) தலைமை ஆசிரியர் முகமது அபுல் கலாம், ஜூலை 9 அன்று நான்காம் வகுப்பு சிறுவன் கரும்பலகையில் ஜெய் ஶ்ரீராம் என எழுதியதற்காக மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

முதலில் சிறுவன் பயத்தில் ஆசிரியர் அடித்ததை தனது பெற்றோரிடம் கூறாமல் மறைத்துள்ளான். இருப்பினும் சிறுவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். பின்னர் பெற்றோரிடம் ஆசிரியர் தன்னை அடித்ததை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சிறுவன் தாக்கப்பட்டதை அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் கிராமம் முழுவதும் பரவியதால், கிராம மக்கள் ஜூலை 13 அன்று பள்ளியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்த கூட்டத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமது அபுல் கலாம், பள்ளி நிர்வாக குழு மற்றும் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய தங்கள் குழந்தைகளை பள்ளி தலைமை ஆசிரியர் வற்புறுத்தியதாக ஒரு சில பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இது தவிர குழந்தைகளை அடித்தது தொடர்பாகவும் பிரச்சனை எழுந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை எல்லை மீறி செல்வதை உணர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஹசாரிபாக்கில் உள்ள முஃபாசில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலிசார் கிராம மக்களை சமாதான படுத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பா குஜூருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட்ட மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜார்கண்ட் பாஜக செய்திதொடர்பாளர் அவினேஷ் குமார், தற்போதைய ஆளும் அரசு தீவிர இஸ்லாமியவாதத்தை அங்கீகரித்து மாநிலம் முழுவதும் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் ஹேமந்த சோரனின் சொந்த ஊரான ஜம்தாரா மற்றும் தும்கா பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டன.

அங்கு வார விடுமுறை ஞாயிற்று கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டதாகவும், அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளியில் இதுபோன்று நடப்பதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.