ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு.. தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து விலகிய ராணா.. பாஜகவில் இணைகிறார்..?

ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து அதன் மாகாண தலைவர் தேவேந்தர் சிங் ராணா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் சுர்ஜித் சிங் ஸ்லாத்தியாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தேசிய மாநாட்டு கட்சி உறுதி படுத்தி உள்ளது. ராணா மற்றும் சுர்ஜித் இருவரின் ராஜினாமாவை கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஏற்றுகொண்டதாக அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல நான எனது அரசியல் பாதையை மாற்றியுள்ளேன் என செய்தி நிறுவனங்களுக்கு ராணா தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: அருணாச்சல் எல்லையில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல்..

ராணா 2014 ஆம் ஆண்டு இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நக்ரோடா சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். இந்த நிலையில் தேவேந்தர் சிங் ராணா மற்றும் சுர்ஜித் சிங் ஸ்லாத்தியா இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: இந்த நிதியாண்டு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: உலக வங்கி

தேசிய மாநாட்டு கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராணா இந்துக்களின் முகமாக அறியப்பட்டார். அவருக்கு இந்துக்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமிய மற்றும் குஜ்ஜார் சமூகத்தின் ஆதரவையும் பெற்றவர் ஆவார். இவரது ராஜினாமா கட்சிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

Also Read: பின்னடைவில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.. திட்டத்தை ரத்து செய்யும் நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.