ஷியா முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் குறி வைக்கப்படுவீர்கள்: ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை
ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து பயங்கரவாத செயல்கள் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுபான்மை இனமான ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பிற சன்னி முஸ்லிம் வசிக்கும் நாடுகளில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ்-கே தனது பத்திரிக்கையில் ஷியா முஸ்லிம்கள் உலகில் எங்கு இருந்தாலும் குறி வைக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் என அந்த பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்தாத் முதல் கோரசன் வரை எல்லா இடங்களிலும் ஷியா முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐ எஸ் அமைப்பின் இந்த எச்சரிக்கை ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும் பாலும் ஆப்கனில் தாலிபான் ஆட்சியை பிடித்ததில் இருந்தே ஷியா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தற்போது ஐ எஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Also Read: இஸ்லாம் எங்களின் மாநில மதம் கிடையாது.. பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு: முராத் ஹசைன்
ஆப்கனில் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று ஷியா முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த மசூதியில் குண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல் அக்டோபர் 8 ஆம் தேதி குண்டூசில் உள்ள மசூதியில் ஷியா முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் பலி ஆகினர்.
Also Read: ஹைதியில் அமெரிக்க கிறிஸ்துவ மிஷினரிகள் கடத்தல்.. பதற்றத்தில் உலக நாடுகள்.
150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதற்கு முன்பு பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர். தாலிபான் ஆட்சியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவது தாலிபான்களுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: ராய்பூர் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 6 CRPF வீரர்கள் காயம்..