மேற்குவங்கத்தில் வன்முறை தொடர்பாக இதுவரை 24 FIR மற்றும் 21 பேர் கைது..?

மேற்குவங்கத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சமூகவலைதளங்களில் போலியான கருத்து பதிவிட்டதாக இதுவரை 31 எப்.ஐ.ஆர் மற்றும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வந்தவுடன் அடுத்த 5 நாட்களுக்கு மேற்குவங்கத்தில் வன்முறை நடந்தது. இந்த வன்முறையில் பாஜக தொண்டர்கள் 15 பேர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை தொடர்பாக சமூகவலைதளங்களில் போட்டோ மட்டும் வீடியோக்கள் வேகமாக பரவ தொடங்கின.

இந்த நிலையில் வன்முறை நிகழ்ந்த 5 நாட்களில் 550 போலியான பதிவுகளை அடையாளம் கண்டுள்ளதாக மேற்குவங்க போலிசார் தெரிவித்துள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 34 வழக்குகளும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் பாஜகவின் சுவேந்து அதிகாரி, கைலாஷ் விஜயவர்கியா, அக்னிமித்ரா பால் ஆகியோர் மீது காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலியான பதிவுகள் நீக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக மத்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த கலவரத்திற்கு பாஜகவே காரணம் என திரிணாமுல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்கத்தில் இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என கூறினார். மேற்குவங்கத்தில் நடக்கும் வன்முறைக்கு பாஜகவே காரணம். பாஜக ஐ.டி செல் திட்டமிட்டே போலியான செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை மேற்குவங்கத்தில் 34 எப்.ஐ.ஆர் மற்றும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *