இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை..?

இறக்குமதிக்காக இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனும், எண்ணெய் இறக்குமதிக்காக மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும் இலங்கை கேட்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி கூறுகையில், இந்தியா உடனான பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக இருந்தது. இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உடனான அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், எண்ணெய்க்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரி கூறியுள்ளார்.

மேலும் இறக்குமதிக்கா கூடுதலாக ஒரு பில்லியன் டாலர் கடன் கேட்டுள்ள நிலையில் அது பரிசீலனையில் உள்ளதாக இலங்கை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்கனவே இந்தியா ஒரு பில்லியன் டாலர் கடனை அறிவித்துள்ளது.

இது தவிர மேலும் ஒரு பில்லியன் டாலர் கடனை இலங்கை இந்தியாவிடம் கேட்டுள்ளது. இது உணவு விலைகள் மற்றும் எரிபொருள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என இலங்கை கூறுகிறது. அதேநேரம் இலங்கை மத்திய வங்கியில் 2 மில்லியன் டாலருக்கு மேல் கொண்டு வரக்கூடிய முதலீட்டாளர்களை தேடிவருவதாக இலங்கை நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

Also Read: மென்பொருள் சேவை துறையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என அறிக்கை..!

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சப்ரி, அடுத்த சில மாதங்கள் இலங்கையர்களுக்கு கடினமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இலங்கையின் மத்திய வங்கிகளில் அமெரிக்க டாலர்களில் முதலீடுகளை ஈர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக பல நாடுகளுடன் பேசி வருவதாக நிதியமைச்சர் கூறினார்.

அவ்வாறு மத்திய வங்கிக்கு அமெரிக்க டாலர் வந்தால் அது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க உதவும். இதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயரும் என கூறியுள்ளார். கடந்த வாரம் நிதிநிலைமை சீராகும் வரை அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்த இயலாது என இடைகால தடைவிதித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டது.

Also Read: இந்திய கோதுமையை இறக்குமதி செய்ய உள்ள எகிப்து.. கோதுமை சப்ளையராக இந்தியா அங்கீகரிப்பு..!

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இப்போது தான் இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என கூறி இராசாயன உரங்களுக்கு தடை விதித்தது, கொரோனா தொற்றுநோயால் சுற்றுலா பாதிப்பு, சீனாவிடம் அளவுக்கு அதிகமான கடன் ஆகியவை பொருளாதார பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.