நிதி நெருக்கடி காரணமாக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூட உள்ள இலங்கை..?

இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இரண்டு தூதரகங்கள் மற்றும் ஒரு துணை தூதரகத்தை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தற்போது நிதி நெருக்கடி, மின்பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, உர தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் தட்டு பாடு உள்ளிட்ட பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளது. அந்நிய செலாவணி இல்லாததால் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் மேலும் கடன் வாங்கும் நிலையில் இலங்கை உள்ளது. இதற்கு ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடே காரணம் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: ரஷ்யா உக்ரைன் போர்: உலக கோதுமை சந்தையை பிடிக்க இந்தியா முயற்சி.. எகிப்துடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை..

இந்த நிலையில் ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நார்வேயின் ஓஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகம் ஆகியவற்றை இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் மூட உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் துபாயில் உள்ள துணை தூதரகம் ஈராக் உடனான இராஜதந்திர உறவுகளை கையாளும் என கூறப்படுகிறது. ஸ்வீடனின் ஸ்டாஹோமில் உள்ள துணை தூதரகம் நார்வே உடனான இராஜதந்திர உறவுகளையும், ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள தூதரகம் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தின் செயல்பாடுகளை கையாளும் என கூறப்படுகிறது.

Also Read: இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு.. பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் இடையே கையெழுத்து..?

இலங்கை தற்போது உலகம் முழுவதும் 63 தூதரகங்களை கையாண்டு வரும் நிலையில் அது தற்போது 60 ஆக குறைந்துள்ளது. இந்த 60 தூதரகங்களையும் கையாள்வது கூட இலங்கைக்கு பிரச்சனையாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக இலங்கை இந்த முடிவை எடுத்துள்ளது. சமீபத்தில் பேப்பர் வாங்க நிதி இல்லாததால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.