நெருக்கடியை சமாளிக்க பணத்தை அச்சடிக்க உள்ளதாக இலங்கை பிரதமர் அறிவிப்பு..?

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில், நாட்டில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று நிகழ்த்திய உரையில், எங்களிடம் பெட்ரோல் தீர்ந்து விட்டது, எங்களிடம் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே உள்ளன. இந்திய கடன் வரியை பயன்படுத்தி டீசல் ஏற்றுமதி ஞாயிற்றுகிழமை இலங்கை வந்தது. இருப்பினும் நாடு முழுவதும் இன்னும் விநியோகிக்கப்படவில்லை. நேற்று வந்த டீசல் ஏற்றுமதியால் டீசல் பற்றாக்குறை ஒரளவு தீரும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் வரியின் கீழ், மே 18 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் இரண்டு டீசல் ஏற்றுமதிகள் வரஉள்ளன. மேலும் மே 18 மற்றும் 29 ஆம் தேதிகளில் இரண்டு ஏற்றுமதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. 40 நாட்களுக்கும் மேலாக 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன. வெளிசந்தையில் டாலர்களை பெற்றுக்கொண்டு இந்த ஏற்றுமதிகளை செலுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்கள் நம் வாழ்வில் மிகவும் கடினமானதாக இருக்கும். உண்மையை மறைக்கவும், பொதுமக்களிடம் பொய் சொல்லவும் தனக்கு விருப்பம் இல்லை. இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, அத்தியாவசிய பொருட்களுக்காக அடுத்த இரண்டு நாட்களுக்குள் 75 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேக்களை குறிப்பிடுகையில், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டை காப்பாற்றுவதே தனது முதல் நோக்கம், ஒரு நபர், குடும்பம் அல்லது குழுவை காப்பாற்றுவது அல்ல என தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் 1.4 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க முடியவில்லை. இதனால் கடைசி முயற்சியாக பணம் அச்சிட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்திய கோதுமையில் அதிக புரத சத்து உள்ளது.. எகிப்து அதிகாரிகள் தகவல்..

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கும் பணத்தை அச்சிட அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது நஷ்டத்தை சந்தித்து வரும் ஶ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமான சேவையை தனியார் மயமாக்க உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2021 ல் 45 பில்லியன் மற்றும் 2022ல் 372 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். ஶ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் தனியார் மயமானாலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த நஷ்டத்தை விமானத்தில் ஏறாத அப்பாவி மக்களும் சுமக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

Also Read: இலங்கைக்கு நெல் சாகுபடிக்காக 65,000 MT யூரியாவை அனுப்ப இந்தியா முடிவு..?

மேலும் இதய நோய்க்கு தேவையான மருந்து, அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது, மருந்து, மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கு உணவு சப்ளை செய்பவர்களுக்கு நான்கு மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு SLR 34 பில்லியன் செலுத்த வேண்டும், நான்கு மாதங்களுக்கும் மேலாக மருந்து விநியோகிப்பவர்களுக்கும் பணம் செலுத்தவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Also Read: இலங்கையை தொடர்ந்து துருக்கியின் பணவீக்கம் 70% அதிகரிப்பு..

Leave a Reply

Your email address will not be published.