சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் டாலர் கடன் பெற அமெரிக்கா செல்லும் இலங்கை குழு..?

தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) 4 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை தொகையை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக தூதுக்குழு ஒன்றை இலங்கை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கை குழு ஏப்ரல் 19 மற்றும் 24 ஆம் தேதிக்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை பிணையில் விடுவிக்க கோரி வருவதாக நிதியமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முடிக்கும் வரை கடன் பத்திரங்கள், வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக நிதி அமைச்சகம் செவ்வாய் அன்று அறிவித்தது.

இந்த ஆண்டு இலங்கை 7 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியால் 1948 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக கடனை செலுத்த தவறியுள்ளது இலங்கை. இலங்கை ரூபாயின் வீழ்ச்சியால் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள், உணவு, மருந்துகள், எரிபொருள் என அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திங்கள் கிழமை முதல் ஒரு வாரத்திற்கு கொழும்பு பங்கு சந்தை தற்காலிகமாக மூடப்படும் என இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சனிக்கிழமை அறிவித்துள்ளது. 1948ல் சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

Also Read: கொரோனா பரவல்: இந்த நிதியாண்டு சீனாவின் வளர்ச்சி குறையும் என கணிப்பு..

போராட்டகாரர்கள் ராஜபக்சே குடும்பத்தை ராஜினாமா செய்யகோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அனைவரும் ராஜினாமா செய்தனர். மேலும் சிறிய அமைச்சரவையை பதவி பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

Also Read: சீன நிறுவனங்களை வெளியேற்றிய இத்தாலி.. பின்னடைவில் சீனா, தைவானுக்கு வாய்ப்பு..?

இந்த அமைச்சரவையில் இணையுமாறு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்கட்சிகள் நிராகரித்துவிட்டனர். அடுத்த வாரம் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா திர்மானம் கொண்டுவரப்பட உள்ளன. எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 500 மில்லியன் டாலர் கடனை வழங்கியது.

அதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குவதாக இந்தியா சமீபத்தில் அறிவித்தது. ஜனாதிபதி ராஜபக்சே கூறுகையில், அந்நிய செலாவணி நெருக்கடி தாம் ஏற்படுத்தியதல்ல, தொற்று நோயால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.