லட்சத்தீவில் மத அடிப்படையில் இருந்த அரசு விடுமுறை வெள்ளிகிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை என மாற்றம்..?

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் வெள்ளி கிழமைக்கு பதிலாக இனி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர். இந்த அறிவிப்பை லட்சத்தீவு கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

லட்சத்தீவு எம்பி முகமது பைசல் கூறுகையில், ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் லட்சத்தீவு மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக லட்சத்தீவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதுநாள் முதல் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சனிக்கிழமை அரை நாள் வேலை நாள் என்றும் கடைபிடிக்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்கள், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் எம்பியுடன் விவாதிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக முகமது பைசல் கூறினார். இது நிர்வாகத்தின் ஒருதலை பட்சமான முடிவு, மக்களின் ஆணைக்கு உட்பட்ட தல்ல. உள்ளாட்சி அமைப்பில் மாற்றம் கொண்டு வரும் போது அதனை மக்களுடன் விவாதிக்கப்பட வேண்டும் என லட்சத்தீவு எம்பி முகமது பைசல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கற்பவர்களின் சரியான செயல்பாட்டு மற்றும் கற்பித்தல் கற்றல் செயல்முறைக்கு தேவையான திட்டமிடல் ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் பள்ளி நிர்வாகம், பள்ளி நேரத்தையும் வழக்கமான பள்ளி நடவடிக்கைகளையும் மாற்றி அமைத்துள்ளதாக பள்ளி நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்தீவு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும் ஆலோசகருமான பிபி அப்பாஸ், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கல்வித்துறையின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி நிர்வாகி பிரபுல் கோடா படேலுக்கு கடிதம் எழுதி உள்ளார். பிபி அப்பாஸ் தனது கடிதத்தில், லட்சத்தீவில் வாழும் மக்கள் இனைவரும் இஸ்லாமியர்கள் என்றும், அவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ப வெள்ளிக்கிழமை விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவுக்கு சமாஜ்வாதி MP ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு..

மேலும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை நடத்துவது தவிர்க்க முடியாத மத நடைமுறையாக கருதப்படுகிறது. எனவே இப்பிரச்சனை குறித்து விவாதிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்களின் கூட்டத்தை கூட்டுமாறு நிர்வாகத்தை பிபி அப்பாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது லட்சத்தீவில் 96.60 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள், 2.7 சதவீதம் பேர் இந்துக்கள், 0.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.

Also Read: மத மாற்றத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய பிரச்சாரம்: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

தற்போது அங்கு மத அடிப்படையில் இருந்த விடுமுறை மாற்றப்பட்டு அனைவருக்கும் பொதுவான அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி காலமானதை அடுத்து புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேலை மத்திய அரசு நியமித்தது. அவரது நியமனத்திற்கும், அவர் லட்சத்தீவில் அமல்படுத்திய சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

Also Read: மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கு கர்நாடகா அமைச்சரவையில் ஒப்புதல்.. காங்கிரஸ் எதிர்ப்பு.

சமீப காலமாக அங்கு போதை பொருட்கள் அதிகமாக பிடிபடுகிறது. மேலும் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு பயங்கரவாதிகள் லட்சத்தீவை தளமாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.