பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிராக போராட்டம்.. பின்னடைவில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம்..

பாகிஸ்தானின் துறைமுக நகரமான குவாதரில் பாகிஸ்தான் மக்கள் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோட் திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தேவையற்ற சோதனை சாவடிகள், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார பற்றாக்குறை, மீன் பிடிக்க சட்டவிரோதமாக சீனர்களுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் உள்ள குவாதரில் பொதுமக்கள் இம்ரான் கான் அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு குவாதரின் போர்ட் ரோட்டில் உள்ள ஒய் சௌக் என்னும் இடத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

மக்ரான் கட்ற்கரையில் சீன மீன்பிடி படகுகளுக்கு தடைவிதிக்க வேண்டும், தேவையற்ற சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், தண்ணீர் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும், ஈரான் உடனான எல்லையை திறக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

பேரணியின் தலைவர் மௌலானா ஹிதாயத் உர் ரஹ்மான் கூறுகையில், இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். பெரிய மீன்பிடி படகுகளுக்கு அனுமதி வழங்கியதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குவாடர் துறைமுகம் கட்டப்பட்ட போதும் மக்கள் வேலையின்றி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சோதனை சாவடிகளில் நிறுத்தி அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என விசாரிப்பது மண்ணின் மைந்தர்களை அவமதிக்கும் செயல் என மௌலான கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீனா பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக குவாடர் துறைமுகம் வரை 60 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சாலை மற்றும் உள் கட்டமைப்பை மேம்படுத்கி வருகிறது. இதனால் சீனர்களுக்கே இங்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Also Read: சீனாவில் நிலக்கரி தட்டுப்பாட்டை தொடர்ந்து தற்போது டீசல் தட்டுப்பாடு..

இதனால் பாகிஸ்தானில் சீனர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சீனர்கள் வேலைசெய்யும் பகுதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. பலூச் போராளி கிளர்ச்சி குழுக்களும் பாகிஸ்தான் மற்றும் சீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Also Read: இலங்கை சீனா இடையே அதிகரிக்கும் மோதல்.. இலங்கை வங்கியை கருப்பு பட்டியலில் வைத்த சீனா..

ஆகஸ்டு மாதம் சீன பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் ஒரு சீனர் மற்றும் இரண்டு உள்ளூர் குழந்தைகள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபரில் குவாதரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

2019 அஇம் ஆண்டு குவாதரில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பாகிஸ்தான் கடற்படை வீரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சீனர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சீன அரசு பாகிஸ்தானை கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read: உய்கூர் முஸ்லிம்களின் உடல் உறுப்புகளை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் சீனா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..

Leave a Reply

Your email address will not be published.