சீனாவில் வெளியான மாணவி லாவண்யா மதமாற்ற தற்கொலை விவகாரம்..
அரியலூர் மாணவி லாவண்யா மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த வழக்கை CBI விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. லாவண்யா தற்கொலை விவகாரம் உலக அளவில் டிவிட்டரில் ட்ரெண்டானது.
இந்த நிலையில் லாவண்யா தற்கொலை பற்றி சீன செய்தி நிறுவனமான சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவ பள்ளியிவ் படித்த 17 வயது பள்ளி மாணவி லாவண்யா அதிக வேலை வாங்கப்பட்டதாலும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாலும் தற்கொலை செய்து கொண்டார். இது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
லாவண்யாவின் தந்தை முருகானந்தம், தனது மகளுக்கு பள்ளி நிர்வாகம் அதிகப்படியான நிர்வாக பணிகள் மற்றும் வேலைகளை வழங்கியதால் விஷம் குடித்தாக போலிசில் புகார் அளித்த சில நாட்களில் மாணவி உயிரிழந்தார். அதனை அடுத்து கிறிஸ்துவ பள்ளி மதம் மாற அழுத்தம் கொடுத்ததாக மாணவி கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
இதனை அடுத்து கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் மதமாற்றம் செய்வதாக கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாவண்யா தங்கியிருந்த விடுதியின் பொறுப்பாளராக இருந்த 62 வயது வார்டனை போலிசார் கைது செய்தனர். பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக உள்ளது.
K.அண்ணாமலை தமிழக போலிசாரிடம் இருந்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மாணவியின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிறுமியின் மரணம், கிறிஸ்துவ மதமாற்றத்தினால் நடந்த முதல் மரணம் இல்லை. கடந்த காலங்களிலும் இதேபோன்று உள்ளுர் ஊடகங்களால் செய்தி வெளியிடப்பட்டன.
ஆனால் அவை பரந்த கவனத்தை ஈர்க்கவில்லை. உதாரணமாக சிவசக்தி மற்றும் சுகன்யா என்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி கொலை செய்யப்பட்டதாக கூறி உள்ளுர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மதமாக கிறிஸ்துவம் உள்ளது. முதலாவதாக இந்து மதம் உள்ளது. 2011 கணகெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 6 சதவீதம் அல்லது 4.4 மில்லியன் மக்கள் கிறிஸ்துவத்தின் பல்வேறு பிரிவுகளை பின்பற்றி வருகின்றனர். தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் கிறிஸ்துவ மக்கள் தொகையை பொறுத்தவரை கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லிம்களை விட கிறிஸ்துவர்கள் வேகமாக வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த கொள்கை ஆய்வு மையத்தின் மக்கள்தொகை ஆய்வரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற எந்த இந்திய மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் கேபிள் சேனல்கள் மூலம் கிறிஸ்துவ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. கிறிஸ்துவர்களின் உண்மையான எண்ணிக்கை புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவதைவிட அதிகமாக இருக்கலாம். ஏனென்றால் அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெறுவதற்காக பெரும்பாலான கிறிஸ்துவர்கள் தங்களை கிறிஸ்துவர்களாக பதிவு செய்வதில்லை.
இந்து என்ற அடையாளத்தை நிறுத்தினால் இந்த சலுகைகளை இழக்க நேரிடும். கடந்த ஆண்டு தேவாலயங்கள் தெரிவித்த புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 9.5 மில்லியன் கிறிஸ்துவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் சாஸ்த்ரா பல்கலைக்கழக்த்தின் சமூகவியல் பேராசிரியர் மாதவன் ராகவேந்திரன் கூறுகையில், மற்ற இடங்களை விட இந்தியாவில் கிறிஸ்துவ பணிகள் மிகவும் பாதுகாப்பான சூழலில் செயல்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஆர்வமுள்ள சில நீர்நாய்கள் எப்போதும் வாசலை கடக்க வாய்ப்புள்ளது. சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இளைஞர்கள் உயிரிழக்கும்போது அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என ராகவேந்திரன் தெரிவித்ததாக சவுத் சைனை மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.