பயங்கரவாதிகளுக்கு ஆதரவு.. மீண்டும் சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான்..

பாகிஸ்தான் மீண்டும் சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு(FATF) கூறிய 27 அம்ச கோரிக்கையை நிறைவேற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு மற்றும் நிதி அளித்து வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என FATF பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது. ஆனால் பாகிஸ்தான் 27 கோரிக்கைகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

இன்னும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை பாகிஸ்தான் தடுக்க தவறிவிட்டதாக கூறி அந்நாடு சாம்பல் நிற பட்டியலிலேயே தொடர்கிறது.

குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐநா, அமெரிக்கா, இந்தியா என பல உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட மசூத் அசார், ஹபிஸ் சயீத், ஜக்கி உர் ரஹ்மான் லக்வி, ஹாஜி முகமது அஷ்ரப், ஆரிப் காஷ்மானி, யஹ்யா முஜாஹித், ஹாபிஸ் அப்துல் சலாம் பூட்டவி, சுல்தான் பஷிரூத்தின் மஹ்மூத் ஆகிய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர்.

இவர்கள் அனைவரும் 2001 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாராளுமன்ற தாக்குதல், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல், 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு, 2007 சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

Also Read: அகல பாதாளத்திற்கு செல்லும் பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு.. வரலாறு காணாத வீழ்ச்சி..

இவர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி இருந்தாலும் தற்போது அனைவரும் வெளியில் தான் உள்ளனர். இவர்கள் அனைவருமே லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா, ஜெய்ஷ்-இ-முகமது, அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், இந்தியன் முஜாகிதின் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தலைவராகவும், அவர்களுடன் தொடர்பு உடையவர்களாகவும் உள்ளனர்.

Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..

இவர்கள் மீது பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்காததால் சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. சாம்பல் நிற பட்டியலில் இருப்பதால் உலக வங்கி உட்பட பெரும் நிதி நிறுவனங்கள் யாரும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க முன்வரமாட்டார்கள். தற்போது சீனா மட்டுமே பாகிஸ்தானிற்கு நிதி உதவி அளித்து வருகிறது. ஒருவேளை பாகிஸ்தான் கருப்பு நிற பட்டியலில் வைக்கப்பட்டால் யாருமே நிதி வழங்க முடியாது. ஏறக்குறைய பாகிஸ்தான் திவால் ஆகிவிட்டதாகவே எடுத்துகொள்ளலாம்.

Also Read: இஸ்லாம் எங்களின் மாநில மதம் கிடையாது.. பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு: முராத் ஹசைன்

Leave a Reply

Your email address will not be published.