சைபர் தாக்குதலை தொடங்கிய தைவான் மற்றும் இந்தியா.. மிகப்பெரிய அச்சுறுத்தல் என சீனா கதறல்..

சீனாவின் சைபர்ஸ்பேஸை பொருத்தவரை மிகப்பெரிய சைபர்தாக்குதல் சக்தியாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சைபர் குழு பல வருடங்களாகவே அதன் எதிரி நாடான இந்தியா மற்றும் தைவான் மீது சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் இலக்கில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவும் உள்ளது.

சீனாவின் சைபர் தாக்குதலால் ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் இணைய பாதுகாப்பு தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வழிவகுத்து. இந்த நாடுகள் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் சீனா சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் சைபர் தாக்குதல் பட்டியலில் அதன் நட்பு நாடுகளும் தப்பவில்லை.

அமெரிக்காவை தளமாக கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான இன்ஸிக்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, சீன கம்யூனிஸ்ட் அரசால் ஆதரிக்கப்படும் ஹேக்கர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் தங்களது சைபர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவற்றில் சீனாவின் நட்பு நாடுகளும் உள்ளன.

அவற்றில் தாய்லாந்து இராணுவம் மற்றும் பிரதமர் அலுவலகம், இந்தோனேசிய கடற்படை, பிலிப்பைன்ஸ் கடற்படை, வியட்நாமின் தேசிய சட்டமன்றம் மற்றும் அந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தைவான் ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து மில்லியன் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஆய்வுகளை எதிர்கொள்வதாக கூறியுள்ளது. சீனாவின் மற்றொரு எதிரி நாடான இந்தியாவும் சீனாவின் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத நிலவரப்படி சீனாவின் தாக்குதல் சுமார் 261 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சீன ஹேக்கர்கள் ரஷ்ய அமைப்புகளிடம் இருந்து தகவல்களை திருட ரஷ்ய அதிகாரிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சீனாவின் சைபர்ஸ்பேஸ் குழு அமெரிக்காவையும் தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் சைபர் தாக்குதல் நடத்தி வரும் சீனாவுக்கு இரண்டு நாடுகள் தற்போது மிகப்பெரிய தலைவலியை கொடுத்து வருகிறது. அந்த நாடுகள் தைவானும் இந்தியாவும் ஆகும்.

இதுவரை மற்ற நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தி வந்த சீனாவுக்கு தற்போது இந்தியாவும் தைவானும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த இரண்டு நாடுகளின் சைபர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ளது சீனா. இந்த நிலையில் சீனாவின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, மேம்பட்ட தொடர்ச்சியான அச்சுறுத்தல் (APT) எனப்படும் கிரீன் ஸ்பாட் அமைப்பு சீன நிலப்பரப்பில் பெய்ஜிங் மற்றும் புஜியான் மகாணத்தை மையமாக வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளது.

சீனாவின் பாதுகாப்பு நிறுவனமான த்ரட்புக் அறிக்கையின் படி, தைவானின் கிரீன் ஸ்பாட் அமைப்பு முக்கியமாக சீன அரசு நிறுவனங்களையும், விண்வெளி மற்றும் இராணுவம் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பல பெரிய பல்கலைகழகங்களில் தாக்குதல் நடத்தி தகவல்களை திருடி சீன கணிணிகளில் ட்ரோஜன் ஹார்ஸை வெளியிடுகிறது என கூறியுள்ளது.

Also Read: சீனா மற்றும் லாவோஸ் இடையே ரயில் சேவை.. சீன கடன் பொறியில் சிக்கியதா லாவோஸ்?

மேலும் சீனாவின் மற்றொரு எதிரி நாடான இந்தியாவும் சீனா மீது சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக குளோபல் டைம்ஸ் புலம்பியுள்ளது. அதன் அறிக்கையில், டெல்லியை தளமாக கொண்ட ஹேக்கர்கள் குழு சீனா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த குழு தாக்குதல் நடத்துவது 2017 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. தெற்காசியாவுக்கே இந்த குழுவால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

Also Read: பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்கும் சீனா.. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான்..

சீனாவின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஆன்டிய் லேப் கூறுகையில், சீனாவின் பாதுகாப்புத்துறை, பல்கலைகழகங்கள் மீது டெல்லி ஹேக்கர் குழு தாக்குதல் நடத்துகிறது. மேலும் தீங்கிழைக்கும் ஆன்ட்ராய்டு பயன்பாடுகள் மூலம் மொபைல் போன்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹேக்கர்கள் வைரஸ் மூலம் கணிணிக்குள் ஊடுருவி பாஸ்வேர்ட் மற்றும் முக்கியமான தரவுகளை திருடுவதாக கூறியுள்ளது. மற்ற நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தி பழகிய சீனா மீது தற்போது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதால் என்ன செய்வது என்றே தெரியாமல் சீனாவின் ஊதுகுழல் மூலம் புலம்பி வருகிறது.

Also Read: இன்னும் 3 மாதத்தில் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும்.. டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.