ஆப்கானிஸ்தானில் காந்தகாரை கைப்பற்றிய தாலிபான்கள்..?

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அகற்றுவதே தனது முதல் லட்சியம் என ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி தொலைகாட்சி பேட்டி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான காந்தகாரை கைப்பற்றியுள்ளதால் விரைவில் அவர்கள் தலைநகரை கைப்பற்ற கூடும் என தெரிகிறது.

அமெரிக்கப்படைகள் விலகியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களை தாலிபான்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் தாலிபான்கள் ஆதிக்கத்திற்குள் வந்துள்ள பகுதிகளில் தாலிபான்கள் பெண்களை வலுகட்டாயமாக திருமணம் செய்ய கடத்தி செல்வதாக கூறப்படும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களின் முதல் பணி என கூறியுள்ளார்.

பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுகொள்ள முடியாது என ஜனாதிபதி கூறினார். மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் மற்ற நாட்டு தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் போரை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அஷ்ரப் கனி பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான், உலக தலைவர்களிடம் தங்களை காப்பாற்றும் படி வேண்டுகோள்வைத்துள்ளார். ஆப்கனில் தினந்தோறும் மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.