அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்கும் தாலிபான்.. இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு..
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கமான தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) இயக்கத்துக்கும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடம் இருந்து அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தான் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு TTP தலைவரை விடுவிக்ககோரியும், TTP மீது உள்ள தடையை நீக்ககோரியும் TTP அமைப்பை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் போலிஸ் தரப்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு TTP சார்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஒரு போலிசார் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் TTP அமைப்புக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் TTP அமைப்பை சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டு சென்ற ஆயுதங்களை வாங்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என பாகிஸ்தான் நினைக்கிறது.
அமெரிக்கா விட்டு சென்ற ஆயுதங்களை யாரும் வாங்க முன்வராததால் அதனை பாகிஸ்தானுக்கு மிக குறைந்த விலையில் தாலிபான்கள் விற்றுள்ளனர். மேலும் TTP அமைப்புக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கப்படைகள் ஆப்கனை விட்டு செல்லும் போது 83 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்று சென்றுள்ளது.
Also Read: பாலைவனத்தில் போர்கப்பலை மறைத்து வைத்து இரகசியமாக போர்பயிற்சியில் ஈடுபடும் சீனா..
இந்த ஆயுதங்களை வாங்கி பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு இந்த ஆயுதம் வழங்க வாய்ப்பு உள்ளது. அந்த ஆயுதங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தினால் அவர்களை சமாளிக்க இந்திய இராணுவம் தயாராகவே இருப்பதாக தெரிவித்தார்.
Also Read: S-500 அமைப்பை வாங்க தயார்..? ஆனால் இந்தியாவுக்கு விற்க கூடாது.. ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த சீனா..
அமெரிக்க ஆயுதங்கள் ஆப்கனில் அங்கு உள்ள வியாபாரிகளால் வெளிப்படையாக விற்கப்படுகிறது. அதனை TTP அமைப்பினர் வாங்கி பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக பயன்படுத்துவார்கள். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரும் அந்த ஆயுதங்கள் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.
Also Read: கென்யாவில் தனது இரண்டாவது இராணுவ தளத்தை அமைத்து வரும் சீனா..? இந்தியாவை தாக்க திட்டமா..?