நுபுர் சர்மாவிற்கு எதிராக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு தாலிபான்கள் ஆதரவு..

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் நுபுர் சர்மாவிற்கு எதிராக நேற்று முன்தினம் கருத்து தெரிவித்து இருந்த நிலையில், நீதிபதிகளின் கருத்துகளை தாலிபான் வரவேற்றுள்ளது.

நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் தொடரப்பட்ட வழக்குகளை அனைத்தையும் ஒன்றாக இணைந்து டெல்லிக்கு மாற்றகோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு இதனை விசாரித்தது.

நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது நீதிபதி சூர்யா காந்த், நுபுர் சர்மாவின் தளர்வான நாக்கு தான் அனைத்து பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது எனவும், அவர் தனது செயலுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

நீதிபதிகளின் இந்த கருத்து கன்ஹையா லாலின் கொலையை நியாயப்படுத்துவது போல் இருப்பதாக கூறி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்லாமியர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு தாலிபான்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், நீதிபதி சூர்யா காந்தின் கருத்துகளை மேற்கோள்காட்டி, ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நுபுர் சர்மாவும் அவரது நாக்கும் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கரையாக்கிவிட்டதாக இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இஸ்லாம் மதத்தின் நபிகள் பற்றி கூறிய கருத்துக்கு நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் கூறியதாக அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் நுபுர் சர்மாவின் உருவத்துடன் தலையில் ஒரு சுவரொட்டியையும், அதன் மேல் ஒருவர் கால் வைக்கும் புகைப்படைத்தையும் ஜபியுல்லா முஜாஹித் பதிவிட்டுள்ளார். நீதிபதிகளின் கருத்துக்கு தாலிபான்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகளின் இந்த கருத்தை எதிர்த்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.என்.ரமணாவிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.