இந்திய அரசுக்கு தாலிபான் நன்றி.. ஆப்கனில் இருந்து டெல்லி வந்தடைந்த இந்தியர்கள்..
மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 1.6 மெட்ரிக் டன் மருந்து பொருட்களை அனுப்பியுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் இன்றியமையாதது என தாலிபான் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
உயிர்காக்கும் மருந்துகள் சிறப்பு விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு டெல்லியில் இருந்து சனிக்கிழமை அன்று சென்றது. இதனை இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் கூறுகையில், இந்த இக்கட்டான நிலையில் இந்தியாவின் இந்த உதவி ஆப்கன் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மாமுண்ட்சாய் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா குழந்தைகளுக்கும் ஒரு சிறிய உதவி, ஒரு சிறிய நம்பிக்கை மற்றும் அவர்களை நம்பும் ஒருவர் தேவை. இந்தியாவில் இருந்து முதல் மருத்துவ உதவி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வந்தடைந்தது. 1.6 மெட்ரிக் டன் உயிர்காக்கும் மருந்துகள் பல ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தானின் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் தனது ட்விட்டில், இந்தியா இந்த பிராந்தியத்தில் ஒரு முன்னணி நாடு, ஆப்கானிஸ்தான் இந்திய உறவுகள் மிகவும் முக்கியமான ஒன்று. மருந்து பொருட்களை அனுப்பிய இந்திய அரசுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Also Read: பாகிஸ்தானில் இலங்கை நபரை கொன்று உடலை எரித்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு..
இந்தியர்களை ஆப்கனில் இருந்து வெளியேற்றும் தேவி சக்தியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை அன்று, 10 இந்தியர்கள் மற்றும் இந்து சீக்கிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 94 ஆப்கானிஸ்தானியர்களை இந்திய அரசு சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்தது. அந்த விமானத்தில் சனிக்கிழமை அன்று 1.6 மெட்ரிக் டன் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் மற்றும் பயணிகளுடன் காபூல் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..
இந்த ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து ஆப்ரேஷன் ‘தேவி சக்தி’ திட்டத்தின் மூலம் இப்போது 669 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள், ஆப்கானிய இந்து சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஆப்கானியர்களும் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் 438 இந்தியர்கள் உட்பட 565 பேர் வெளியேற்றப்பட்டனர்.
Also Read: பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்கும் சீனா.. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான்..