இந்திய விமானப்படைக்கு 100வது ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சரை வழங்கிய டாடா மற்றும் L&T..

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் லார்சன் அண்ட் டர்போ (L&T) இணைந்து செவ்வாய் கிழமை இந்திய விமானப்படைக்கான 100வது ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சரை (AAFL) வழங்கியுள்ளது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை DRDO வின் ஏவுகணைகள் மற்றும் மூலோபாய அமைப்புகளின் டைரக்டர் ஜெனரல் பிஎச்விஎஸ் நாராயண மூர்த்தி, கர்நாடகாவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெடின் வெமகல் வசதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், L&T மற்றும் பல MSMEs நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) இந்திய இராணுவத்திற்கு 49 ஆகாஷ் லாஞ்சர்களை வழங்கியுள்ளது. TASL தலைமை நிர்வாக அதிகாரி சுகரன் சிங் கூறுகையில், 100வது ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சரின் வெற்றிகரமான டெலிவரி TASL மற்றும் இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறைக்கு ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.

L&T முழு நேர இயக்குனர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், L&T உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை நமது ஆயுத படைகளுக்கு வழங்குவதில் தனி கவனம் செலுத்துகிறது. 100வது ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சரின் டெலிவரியானது ஆகாஷ் ஏவுகணை திட்டத்தை நோக்கிய முக்கிய மைல்கல்லாகும் என தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சர் என்பது வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கான பல-தொழில்நுட்ப ஆயுத ஏவுதல் தளமாகும். இது DRDO வின் IGMDP திட்டத்தின் கீழ் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் L&T ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது. இந்த ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சர், ஒரு டாடா ட்ரக் மூலம் இழுத்து செல்லப்படும், தன்னியக்கமாக நிலைநிறுத்தக்கூடிய, பிரிக்க கூடிய டிரெய்லரை கொண்டுள்ளது.

Also Read: அக்னியை தொடர்ந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பிருத்வி-II ஏவுகணை சோதனை வெற்றி..

ராணுவம் மற்றும் விமானப்படை ஏவுகணைகள் இரண்டிலும் தலா 3 ஆகாஷ் ஏவுகணைகள் தயாராக உள்ளன. இராணுவத்தின் சுய-இயக்கப்படும் துவக்கி (ASPL) 360 டிகிரி ஸ்லேவபிள் மற்றும் உயரத்தில் அதன் வில் 6 முதல் 60 டிகிரி வரை உள்ளது. ஆனால் ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சர் (AAFL) 360 டிகிரி ஸ்லேவபிள் மற்றும் உயரத்தில் 8 முதல் 55 டிகிரி வரை வரிசைப்படுத்துதல் முறையை பொறுத்து எல்லா திசைகளிலும் ஏவுகணையை ஏவமுடியும்.

Also Read: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன விமானந்தாங்கி கப்பலை கடலில் இறக்கிய சீனா..

ஆகாஷ் ஏர்ஃபோர்ஸ் லாஞ்சர் முழு தானியங்கு மற்றும் தொலை இயக்கத்திற்கான அல் எலக்ட்ரோ சர்வோ டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது. போர் மண்டலத்தில் ஆகாஷ் குழு தன்னிறைவு அடைய பல துணை நிபுணத்துவ வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

Also Read: இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 5 ஆண்டுக்குள் தயாராகிவிடும்: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்

Leave a Reply

Your email address will not be published.