மின்சார வாகனம் மற்றும் சார்ஜிங் துறையில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள டாடா..

அடுத்த நான்கு ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர். இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி அதிகமாகி வருவதால் டாடா மோட்டார்ஸ் அதனை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் பத்து வகையான வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் வாகனப்பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், இந்த எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளார். தனியார் பங்கு நிறுவனமான டிஜிபி ரைஸ் கிளைமேட் டாடா மோட்டார்ஸ் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் மற்றும் டைகர் ஆகிய இரண்டு மின்சார வாகனங்களை மாதத்திற்கு 1,000 யூனிட்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் 3,000 முதல் 5,000 வரை முன்பதிவு செய்யப்படுவதாக கூறியுள்ளது. இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

இதுத்தவிர மேலும் புதிய 10 மின்சார வாகனங்களை டாடா அறிமுகப்படுத்த உள்ளது. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் SUV, டியாகோ, ஆல்ட்ரோஸ் SUV, ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. சிப் பற்றாக்குறையால் தற்காலிகமாக உற்பத்தி குறைந்துள்ளது. இந்த வாகனங்கள் மாதத்திற்கு 30,000 யூனிட்கள் விற்பனையாகிறது.

மாதத்திற்கு 40,000 யூனிட்கள் விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. மேலும் மின்சார வாகனங்களை சார்ஜிய் செய்ய வசதியாக டாடா பவர் நிறுவனம் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.

Also Read: உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஹைப்பர்லூப்..? மும்பை-புனே வெறும் 20 நிமிடத்தில் பயணம்.

மேலும் 10,000 வீட்டு EV சார்ஜிங் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 180 நகரங்களில் மாநில, மத்திய நெடுஞ்சாலைகள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் இந்த் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 10,000 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக டாடா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..

EV வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் மாசுப்பாடு குறையும் என டாடா பவர் நிறுவனத்தின் தலைவர் பிரவீர் சின்ஹா தெரிவித்துள்ளார். டாடா பவர்ஸ், டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ், டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் மின்சார பேருந்துகளுக்கு சார்ஜிங் செய்யவும் பேருந்து போக்குவரத்து கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..

Leave a Reply

Your email address will not be published.