கூகுள் பே, PAYTM, போன் பேவிற்கு மாற்றாக UPI செயலியை துவக்க உள்ள டாடா..?

நாட்டின் மதிப்புமிக்க நிறுவனமான டாடா குழுமம் தற்போது UPI பேமெண்ட்ஸ் பணப்பரிவர்த்தனையில் களமிறங்க உள்ளது. டாடாவின் இந்த புதிய பேமெண்ட்ஸ் அப்ளிகேஷன் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக டாடா குழுமம் தனது சொந்த யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான டிஜிட்டல் பேமெண்ட் சேவையை வழங்குவதற்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திடம் (NPCI) அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தக பிரிவான டாடா டிஜிட்டல் மூலம் அதன் UPI உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனியார் வங்கியான ICICI வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர மற்றொரு தனியார் வங்கியுடனும் டாடா டிஜிட்டல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிப்படி, UPI சேவைகளை வழங்க வேண்டுமானால் வங்கி அல்லாத தளங்களான போன் பே மற்றும் கூகுள் பே போன்ற நிறுவனங்கள் வங்கிகளுடன் கூட்டுசேர வேண்டும். இதன் மூலம் பயனர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும். உதாரணமாக கூகுள் பே நிறுவனம் ஸ்டெட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC BANK மற்றும் ICICI BANK ஆகிய தனியார் வங்கிகளுடன் இணைந்து பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.

Also Read: ரஷ்யாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்க உள்ள இந்தியா..?

இந்த நிலையில் டாடா டிஜிட்டல் நிறுவனம் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநர்களாக (TRAP) செயல்பட NPCI விடம் விண்ணப்பித்துள்ளனர். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) நிறுவனத்துடன் இணைந்து அடுத்த மாதம் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியின் போது டாடாவின் பேமெண்ட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

டாடா டிஜிட்டல் நிறுவனம் தனது புதிய UPI டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு டாடா நியூ (Tata Neu) என பெயரிட்டுள்ளது. இதேபோல மற்ற டிஜிட்டல் நிறுவனங்களான பேடிஎம், அமெசான் பே மற்றும் வாட்ஸ்அப் பே போன்ற நிறுவனங்களும் களத்தில் உள்ளன. டாடாவின் வருகை இந்த நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Also Read: சிப் உற்பத்தியில் சீனாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்யும் இத்தாலி.. இஸ்ரேல், தைவானுடன் கூட்டு..?

ஏற்கனவே டிஜிட்டல் தளத்தில் கால்பதித்துள்ள அமேசான் நிறுவனம் அதன் பல்வேறு பிரிவுகளுக்கு அமெசான் பே மூலம் கட்டணம் செலுத்தும் போது கேஷ்பேக் சலுகையை வழங்கி வருகிறது. அதேபோல் ஏற்கனவே டிஜிட்டலில் கால் பதித்துள்ள டாடாவும் பிக்பாஸ்கெட், 1எம்ஜி, குரோமா, டாடா கிளிக் போன்ற அனைத்திற்கும் டாடா நீயூ மூலம் பணம் செலுத்தும் வகையில் பயனர்களுக்கு எளிதான அணுகலை வழங்க உள்ளது. NCPI தகவலின்படி, பிப்ரவரி மாதத்தில் 4.52 பில்லியன் பரிவர்த்தணைகள் மூலம் 8.26 டிரில்லியன் ரூபாய் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.