ஏலத்தில் டாடா வெற்றி.. 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உரிமையாளரிடமே சென்ற ஏர் இந்தியா நிறுவனம்..?

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக நடந்த ஏலத்தில் டாடா வெற்றி பெற்றுள்ளார்.

சால்ட்-டு-சாப்ட்வேர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான இறுதி ஏலத்தை சமர்பித்தன. இதில் டாடா சன்ஸ் விமான நிறுவனத்தை வாங்க அதிக சலுகைகளை சமர்பித்ததை அடுத்து இதில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை குழு நிர்ணயித்த விலையை விட 3,000 கோடி ரூபாய் அதிகமாக டாடா சன்ஸ் சமர்பித்துள்ளது. இதனாலயே ஏர் இந்தியா நிறுவன ஏலத்தில் டாடா வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை இன்னும் சில நாட்களில் மத்திய அமைச்சரவையின் குழு தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை தனது மற்ற நிறுவனங்களான விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களையும் டாடா இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 1932 ஆம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் டாடா குழுமத்தால் நிறுவப்பட்டது. பின்னர் 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Also Read: இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.. இராணுவத்தை பயன்படுத்த முடிவு..

பின்னர் 1952 ஆம் ஆண்டு அரசாங்கம் ஏர் இந்தியாவை தேசியமயமாக்கியது. தற்போது 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஏர் இந்தியா நிறுவனம் சென்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 40,000 கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், 23,000 கோடி கடனுடன் டாடா நிறுவனத்திடம் அரசு ஒப்படைக்க உள்ளது.

Also Read: இந்தியாவில் சிப் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தைவானுடன் பேச்சுவார்த்தை.. எச்சரிக்கும் சீனா..

ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் கையகப்படுத்திய நிலையில் 4,400 உள்நாட்டு மற்றும் 1,800 சர்வதேச தரையிரக்கம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள விமானநிலைய கட்டுப்பாடு, பார்க்கிங் செய்யும் இடம் மற்றும் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான இடங்கள் மற்றும் சரக்கு கையாளும் சேவைகளும் டாடாவின் கட்டுப்பாட்டுக்கு செல்கிறது.

Also Read: சர்வதேச அணுசக்தி அமைப்பு தேர்தல்.. ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி..

Leave a Reply

Your email address will not be published.