பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண் பிரதமர் மோடிக்கு கண்ணீருடன் கோரிக்கை..!

செவ்வாய் அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண் தன்னையும் தனது குழந்கையையும் இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர் மரியா தாஹிர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்த குற்றவாளிகளான ஹாரூன் ரஷீத், மாமூன் ரஷீத், ஜமீல் ஷஃபி, வகாஸ் அஷ்ரப், சனம் ஹாரூன் மற்றும் மேலும் மூன்று பேர் சேர்ந்து மரியா தாஹிரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இருப்பினும் மரியா தாஹிருக்கு நீதி கிடைக்கவில்லை. நீதிக்காக 7 வருடமாக போராடி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை இந்தியாவுக்கு வர அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். Pok நீதிமன்றங்கள், காவல்துறை மற்றும் அரசாங்கங்கள் தனக்கு நீதியை உறுதி செய்ய தவறி விட்டதாக கூறியுள்ளார்.

தன்னையும் தனது குழந்தையையும் அரசியல்வாதி சவுத்ரி தாரிக் பாரூக் மற்றும் காவல்துறை தன்னை மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குழந்தைகளையும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கொல்லாலாம் எனவும் கூறியுள்ளார். தங்கள் உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதால் தன்னையும் தனது குழந்தைகளையும் இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read: இஸ்ரேல் உடனான உறவை இந்தியா கைவிட வேண்டும்: கம்யூனிஸ்ட் தீர்மானம்

இதற்கு முன்னதாக பல டிவீட்களில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், காவல்துறை, அரசாங்கம் மற்றும் நீதிமன்றம் தன்னை பாதுகாக்க வேண்டும் அல்லது ஸ்ரீநகருக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மரியா, நீதி மற்றும் பாதுகாப்பிற்காக வேறொரு நாட்டின் பிரதமரை அழைப்பதாக டிவிட் செய்து இருந்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நீதி கேட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நீதிமன்றங்களுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளதாகவும், ஆனால் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுப்பதாகவும் மரியா கூறியுள்ளார். நீதிமன்றம் என்னையும் எனது குடும்பத்தையும் அவமானப்படுத்தியது, நான் திருமணமான பெண் என்பதால் நீதி கிடைப்பது கடினம் என கூறியுள்ளார். தற்போது மரியா Pok மிர்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற நிலையில், மரியா தாஹிருக்கு அனுமதி கிடைக்குமா என சிறிது நாட்களில் தெரிய வரும்.

Also Read: ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியனை விட இந்தியா குறைவாகவே எரிபொருள் வாங்குகிறது: அமைச்சர் அதிரடி

Leave a Reply

Your email address will not be published.