போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட கோவில்கள் மீண்டும் கட்டப்படும்: கோவா முதல்வர்
ராஜஸ்தானின் ஆலவார் மாவட்டத்தில் வளர்ச்சி என்ற பெயரில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலை இடித்தது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில். போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட கோவில்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில். 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை காங்கிரஸ் அரசு இடித்தது ஏற்புடையது அல்ல. அசோக் கெலாட் தலைமையிலான அரசின் செயல் பொருத்தமற்றது என கூறியுள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட மத இடங்களை மீண்டும் கட்டியெழுப்பப்டும் என கோவா முதல்வர் கூறியுள்ளார்.
ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் என்ற இடத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இடிக்கப்பட்டது. புல்டோசர்கள் மூலம் கோவில் இடிக்கப்பட்டது. புல்டோசர்கள் மூலம் சிற்பங்கள் உடைக்கப்பட்டதாகவும், 300 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உடைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வளர்ச்சிக்காகவும் சமூகத்தின் நலனுக்காக இடிக்கப்ட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் MLA ராம்கேஷ் மீனா கூறுகையில், ராஜ்நகரில் உள்ளுர் மக்களின் நலனுக்காக கோவில் இடிக்கப்பட்டதாகவும், நடவடிக்கை எடுப்பதற்கு முன் அப்பகுதி மக்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read: தமிழக மாவோயிஸ்ட் உட்பட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது NIA..
ஆனால் இப்பகுதி மக்கள் பாஜக கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்ததால் கோவில் இடிக்கப்பட்டதாக பொது மக்களும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டுகின்றனர். பாஜக தலைவரும் எம்எல்ஏவுமான ராஜேந்திர ரத்தோர் காங்கிரஸ் நிர்வாகத்ததை கடுமையாக சாடியுள்ளார்.
Also Read: சர்ச்சில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் சிறுமி.. உ.பியில் பரபரப்பு..
உள்ளுர் எம்எல்ஏ ஒருவர் தன்னுடன் சேருமாறு 34 கவுன்சிலர்களை மிரட்டியதாகவும், இல்லையெனில் புல்டோசர் இடிப்பு தொடரும் என எச்சரித்ததாக தெரிவித்துள்ளார். வளர்ச்சி என்ற பெயரில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலை காங்கிரஸ் அரசு இடித்துள்ளதாக ராஜேந்திர ரத்தோர் குற்றம் சாட்டியுள்ளார்.