எல்லையில் மீண்டும் பதற்றம்.. இரண்டு நாள் பயணமாக லடாக் செல்லும் இராணுவ தளபதி எம் எம் நரவனே..
லடாக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் இரண்டு நாள் பயணமாக இராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனே லடாக் செல்கிறார். லடாக்கில் பாதுகாப்பு மற்றும் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக இராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள நமது இராணுவ வீரர்களுடனும் உரையாடுவார் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவுடன் லடாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்களும், சீன தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர்.
அதன்பிறகு எல்லை தொடர்பாக இந்திய மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையே 12 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. எல்லை பிரச்சனை மீண்டும் அதிகரித்தே உள்ளது. மோதலுக்கு பிறகு சீனா ஒருசில இடத்தில் பின்வாங்கினாலும் இன்னும் துருப்புகளை லடாக்கிற்கு அருகே சீனா எல்லையில் நிறுத்தி உள்ளது.
தற்போது கல்வான், கோக்ரா மற்றும் பாங்காங் தசோ பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. PP 15 பகுதியிலும் பதற்றமாகவே உள்ளது. இதுதொடர்பாக பேசிய இராணுவ தளபதி எம் எம் நரவனே, இரு நாடுகளுக்கும் இடையே எல்லை ஒப்பந்தம் ஏற்படும் வரை மோதல் வர வாய்ப்புள்ளதாக கூறினார்.
Also Read: எதிரிகளின் ஏவுகணையை குழப்பும் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ள DRDO..
எல்லையில் பிரச்சனை உள்ள நிலையில் இந்திய இராணுவம் எதையும் சந்திக்க தயாராகவே உள்ளது என நரவனே கூறினார். தற்போது சீனா லடாக்கில் படைகளை குவித்து வருகிறது. இது இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..