ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 4 பேர் உயிரிழப்பு..

மே 13 வெள்ளியன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சுதந்திர போராளிகள் (JKFF) என்ற பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த வெள்ளியன்று JK 14-1831 என்ற உள்ளுர் பேருந்து கத்ராவில் இருந்து ஜம்மு நோக்கி சென்றது. கத்ராவில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மால் அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து தீ பிடித்தது. எஞ்சின் பகுதியில் இருந்து பரவிய தீ, சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் பரவியது.

இதில் யாத்ரீகர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கத்ராவுக்கு மாற்றப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஆதாரங்களின் படி, கத்ராவில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது ஒட்டும் வெடிகுண்டு பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தேசிய புலானாய்வு அமைப்பு பேருந்தை ஆய்வு செய்ய நேற்று சம்பவ இடத்திற்கு சென்றது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, கத்ராவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.

Also Read: 1000 கோடி மதிப்பில் எதிரி இலக்கை கண்டறியும் ஸ்வாதி ரேடாரை வாங்க உள்ள இந்திய இராணுவம்..?

மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Also Read: Su-30MKI விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ்..!

Leave a Reply

Your email address will not be published.