ஜம்முகாஷ்மீரில் போலிசார் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு.. 2 போலிசார் உயிரிழப்பு..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பந்தா சௌக் பகுதியில் உள்ள செவான் அருகே திங்கள் கிழமை அன்று ஒரு போலிஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலிசார் உயிரிழந்த நிலையில் 14 போலிசார் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் ஒரு பிரிவு என போலிசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் ஆயுத பிரிவு 9வது பட்டாலியன் போலிஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். படுகாயமடைந்த அனைவரையும் உடனடியாக அருகில் இருந்த இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இருப்பினும் இந்த தாக்குதலில் இரண்டு போலிசார் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள். மூன்று தீவிரவாதிகள் ஸ்கூட்டியில் வந்து பேருந்து மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக போலிசார் கூறியுள்ளனர். மூன்று பயங்கரவாதிகளும் தப்பியோடிவிட்டனர்.

போலிசார் அறிக்கையில், ஜெவான் அருகே போலிசாரை ஏற்றி சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 16 போலிசார் தங்கள் பணிகளை முடித்து விட்டு வளாகத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பியோடியதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெவானில் ஜம்மு காஷ்மீர் ஆயுத பிரிவின் வளாகம் உள்ளது. இங்கு பல பட்டாலியன் பிரிவுகள் உள்ளன. மேலும் CRPF துறை தலைமையகம் மற்றும் ITBP நிலைய தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. இந்த ஆண்டு போலிசார் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 19 போலிசார் கொல்லப்பட்டு உள்ளனர்.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், இந்த தாக்குதலை சந்தேகத்கிற்கு இடமின்றி கண்டிக்கிறேன்.

Also Read: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 37 வங்கதேசத்தினரை கைது செய்த உ.பி. போலிசார்..

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலையும், காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனையையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். பிடிபி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பதிவில், ஸ்ரீநகர் தாக்குதலில் 2 போலிசார் கொல்லப்பட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்களை இழந்து வாழும் குடும்பத்கினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Also Read: மணிப்பூரில் சீனரை திருமணம் செய்த பெண்ணின் வீட்டில் இருந்து 500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன

Leave a Reply

Your email address will not be published.