முதன்முறையாக இந்தயாவிலேயே உருவாக்கப்பட்ட நேவிகேஷனை பயன்படுத்தி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில்ஒ முதன் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ககன் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி முதல் விமானமாக இண்டிகோ தரையிறங்கியுள்ளது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ககன் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி இண்டிகோ நிறுவனத்தின் ATR-72 விமானம் புதன்கிழமை காலை ராஜஸ்தானில் உள்ள கிஷன்கர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஜிபிஎஸ்-உதவி புவி-ஆக்மென்டட் நேவிகேஷனை (GAGAN) இந்திய விமான ஆணையம் மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்துள்ளன. விமானம் தரையிரங்குவதற்காக ஓடுபாதையை நெருங்கும் போது பக்கவாட்டு மற்றும் செங்குத்து வழிகாட்டுதலை வழங்க ககன் பயன்படுத்தப்படுகிறது.

Also Read: பாக். கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண்.. 3 சீனர்கள் உயிரிழப்பு..

இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில், ககன் சிவில் விமான போக்குவரத்திற்கு ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும். ககன் வான்வழியை நவீனமாக்குவதற்கும், விமான தாமதங்களை குறைப்பதற்கும், எரிபொருள் சேமிப்பை கொண்டு வருவதற்கும், விமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ககன் வான்வெளியை நவீனமயமாக்கும், விமான தாமதங்களை குறைக்கும், எரிபொருளை சேமிக்கும் மற்றும் விமான பாதுகாப்பை மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: லிதுவேனியாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு..?

மேலும் ஜூலை 1, 2021 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்களிலும் ககன் பொருத்தப்பட வேண்டும் என DGCA ஆணை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பானுக்கு பிறகு சொந்தமாக நேவிகேஷன் தயாரித்து விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய மூன்றாவது நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.