உலகிலேயே வெண்மையான பெயிண்டை உருவாக்கியுள்ள அமெரிக்க விஞ்ஞானி குழு.. புவி வெப்பமடைதலை குறைக்க உதவும்..

உலகிலேயே மிக வெண்மையான வண்ணப்பூச்சு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த வெள்ளை அக்ரிலிக் பெயிண்ட் சூரிய ஒளியை முற்றிலும் பிரதிபலிக்க கூடியது. இதன் மூலம் புவி வெப்பமடைதல் குறையும் என சியுலின் யுவான் கூறியுள்ளார்.

பர்டியூ பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் விஞ்ஞானி சியுலின் யுவான் தனது குழுவுடன் இணைந்து இந்த அதி வெண்மையான வண்ணப்பூச்சை கண்டறிந்துள்ளார். இந்த வண்ணப்பூச்சு 98.1 சதவீதம் சூரிய ஒளியை பிரதிபலிக்க கூடியது.

மற்ற வண்ணப்பூச்சுகள் 80-90 சதவீதம் மட்டுமே சூரிய ஒளியை பிரதிபலிக்க கூடியவை. இந்த வெள்ளை அக்ரிலிக் பெயிண்ட் மூலம் வண்ணம் பூசும் போது வீடு மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். இதனால் வேறு குளிரூட்டும் சாதனம் எதுவும் தேவைப்படாது என பேராசிரியர் கூறுகிறார்.

இந்த பெயிண்டை கட்டிடங்களுக்கு பூசும் போது சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் சுற்றி இருக்கும் வெப்பநிலையை விட கட்டிடத்திற்குள் குளிர்ச்சியாக இருக்கும். பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏர் கண்டிஷனர்களை விட இது அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Also Read: நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

இதனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக விஞ்ஞானி குழு தெரிவித்துள்ளது. இதன்மூலம் புவி வெப்பமடைவது குறைந்து மக்களுக்கு செலவும் குறையும் என கூறப்படுகிறது. இந்த பெயிண்ட் உலகிலேயே வெண்மையான பெயிண்ட் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்த இந்தியா..

Leave a Reply

Your email address will not be published.