இந்தியாவில் அடுத்த சில தசாப்தங்களுக்கு பாஜக அசைக்க முடியாத கட்சியாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர்

பாரதிய ஜனதா கட்சி அடுத்த சில தசாப்தங்களுக்கு இந்தியாவில் வல்லமை மிக்க கட்சியாக இருக்கும் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல்காந்தி ஏதோ ஒரு மாயையில் இருப்பதாக விமர்சித்து உள்ளார்.

கோவாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது அங்கு மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்து வருகிறார். திரிணாமுல் கட்சியை வெற்றிபெற வைப்பதற்காக மேற்குவங்கத்தை போலவே கோவாவிலும் பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், சுதந்திரத்திற்கு பிறகு 40 ஆண்டு காலமாக காங்கிரஸ் எப்படி பலம் பெற்று அசைக்க முடியாத கட்சியாக இருந்ததோ அதே போல் அடுத்த பல தசாப்தங்களுக்கு பாஜக மிகப்பெரிய அசைக்க முடியாத கட்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ராகுல்காந்தியை விமர்சித்த கிஷோர், பிரதமர் மோடியின் செல்வாக்கு காலப்போக்கில் சரிந்துவிடும் என ராகுல்காந்தி இருக்கிறார். இந்திய அளவில் 30% வாக்குகளை பெற்ற பாஜகவை மக்கள் தூக்கி எறிவார்கள் என நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் பல தசாப்தங்களுக்கு பாஜகவை எதிர்த்து போராட வேண்டி இருக்கும்.

ராகுல் காந்தி என்ன நினைக்கிறார் என்றால், மோடியை மக்கள் தூக்கி எறிவார்கள் என நினைத்து கொண்டு இருக்கிறார். ஆனால் அது நடக்காது. ராகுல் காந்தி அந்த மாயையில் இருந்து வெளிவர வேண்டும் என கிஷோர் கூறியுள்ளார்.

Also Read: ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.. பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு..

மேலும் மக்களிடையே மோடிக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என நீங்கள் அலசி ஆராய்ந்தால் மட்டுமே மோடியை உங்களால் தோற்கடிக்க முடியும். இல்லை என்றால் மோடியை ஒருபோதும் உங்களால் தோற்கடிக்க முடியாது.

நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி எப்படி பார்க்கிறது என்று உங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் சென்று கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள் இதெல்லாம் நேர விரயம் மக்கள் சோர்ந்து போவார்கள் என்று கூறினார்.

Also Read: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு.. சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஆலோசனை..

மேலும் நாட்டில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே பாஜகவை ஆதரிக்கிறார்கள். மீதமுள்ள இரண்டு பங்கினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு குறைந்ததால் 10, 15 கட்சிகளாக பிரிந்து கிடக்கின்றனர் என கூறினார். இதுதான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் ஆகும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

Also Read: இந்திய விண்வெளி சங்கத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. விண்வெளித்துறையில் புதிய மைல்கல்..

Leave a Reply

Your email address will not be published.