இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் இந்தோனேசிய முதல் ஜனாதிபதியின் மகள்..

இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியான சுகர்னோவின் மகள் சுக்மாவதி சுகர்ணோபுத்ரி செவ்வாய் அன்று முறைப்படி இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.

சுக்மாவதி சுகர்ணோபுத்ரி(70) அவரது சொந்த ஊரான பாலியில் உள்ள புலேலெங் நியூஜெர்சியில் அமைந்துள்ள சுகர்னோ சென்டர் ஹரிடேஜ் கிராமத்தில் நடைபெற்ற “சுதி வதனி” என்ற சடங்கு மூலம் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டார். இதனை அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுக்மாவதி கடந்த 20 ஆண்டுகளாகவே இந்து மதத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டதாகவும், இந்து மத நூல்களான பகவத் கீதை, மகாபாரதம், இராமாயணம் போன்ற நூல்களை படித்து வந்ததாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்தோனேசியா டச்சு ஆதிக்கத்தில் இருந்து 1945 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போது நாட்டின் முதல் ஜனாதிபதியாக சுக்மாவதியின் தந்தை சுகர்னோ தேர்ந்தெடுக்க பட்டார். 1967 வரை 22 ஆண்டுகளுக்கு அவர் ஆட்சியில் இருந்தார். மேலும் சுக்மாவதியின் மூத்த சகோதரி மேகாவதி சுகர்ணோபுத்ரி இந்தோனேசியாவின் ஐந்தாவது ஜனாதிபதி ஆவார்.

சுக்மாவதியின் பாட்டி இந்து மதத்தை சேர்ந்தவர். இந்தோனேசியாவில் உள்ள 85 சதவீத இந்துக்கள் பாலி மகாணத்தில் தான் வாழ்கிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு பேஷன் வீக்கில் சுக்மாவதி ஒரு கவிதை எழுதினார். இது இஸ்லாமியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அந்த கவிதையில் இஸ்லாம் மதத்தின் புர்காவை விட இந்தோனேசிய பாரம்பரிய உடை அழகாக இருக்கிறது என கூறி இருந்தார்.

Also Read: ஷியா முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் குறி வைக்கப்படுவீர்கள்: ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை

இதனால் இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்டதாக கூறி சுக்மாவதிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. வேறு வழியின்றி தனது அடி இதயத்தில் இருந்து மன்னிப்பு கேட்பதாக கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் தான் சுக்மாவதி இந்து மதத்திற்கு மாறி உள்ளார். சுக்மாவதி இந்து மதத்திற்கு மாற உள்ள அழைப்பிதழ் கொரோனா தொற்று காரணமாக யாருக்கு அனுப்பப்படவில்லை.

இருப்பினும் சமூகவலைதலங்கள் மூலமாக அனைவருக்கும் சென்று சேர்ந்தது. அழைப்பிதழ் கிடைத்தாலும் கொரோனா தொற்று காரணமாக யாரும் விழாவிற்கு வர வேண்டாம் என சுக்மாவதி குடும்பத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று செவ்வாய் கிழமை அதிக கூட்டம் இல்லாமல் விழா எளிமையாக நடந்தது. “சுதி வதனி” சடங்கு மூலம் சுக்மாவதி முறைப்படி இந்து மதத்திற்கு மாறினார்.

Also Read: இஸ்லாம் எங்களின் மாநில மதம் கிடையாது.. பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு: முராத் ஹசைன்

உலகிலேயே இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட இந்தோனேசியாவில் முதல் ஜனாதிபதியின் மகள் இந்து மதத்திற்கு மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜாவா இளவரசி காஞ்செங் மகேந்திரனி பாலியில் “சுதி வதனி” சடங்கு மூலம் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீனாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட உய்கூர் முஸ்லிம் இன பெண்..

Leave a Reply

Your email address will not be published.