திருமண வயதை உயர்த்தும் முடிவு பெண்களுக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

உத்திர பிரதேசம் பிரயாக்ராஜில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பேரணியில் உரையாற்றினார் பிரதமர் மோடி. சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்த மோடி, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவு சிலருக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

உத்திர பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பெண்களை மையமாக கொண்டு நடைபெற்ற நலதிட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அன்னை கங்கை-யமுனா-சரஸ்வதி சங்கமிக்கும் நிலமாக பிரயாக்ராஜ் இருந்ததாகவும், ஆனால் இன்று இந்த புனித யாத்திரை நகரம், பெண்கள் சக்தியின் அற்புதமான சங்கமத்தை கண்டு வருவதாகவும் கூறினார்.

திருமண வயதை உயர்த்தும் அரசின் முடிவு பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது சிலருக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு முன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் திருமண வயதை உயர்த்தியதற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி, அவர்கள் படித்து முன்னேற நேரம் கிடைக்கும் என முயற்சி செய்து வருகிறோம். நாடு தன் மகள்களுக்காக இந்த முடிவை எடுக்கிறது. இதில் யாருக்கு பிரச்சனை என்று எல்லோரும் பார்க்கிறார்கள். இது சிலருக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. 2012 முதல் 2017 வரை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியை விமர்சித்தார் பிரதமர் மோடி.

Also Read: கோவா விடுதலை நாளில் தனது முதல் கடல் சோதனையை தொடங்கிய INS மோர்முகாவோ போர்கப்பல்..

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உத்திர பிரதேசத்தின் சாலையில் மாஃபியா ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்கள் தான். அவர்கள் சாலைகளில் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும் கடினமாக இருந்தது. ஆனால் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த குண்டர்களை சரியான இடத்தில் வைத்துள்ளார் என மோடி கூறினார்.

Also Read: இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை..

ஆணாதிக்கத்தை பற்றி குறிப்பிட்ட மோடி, பல தசாப்தங்களாக குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களின் பெயரில் நிலமும் சொத்துக்களும் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் இன்று பாரதிய ஜனதா அரசு அதனை நீக்கியுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகள் பெண்களின் பெயரில் கட்டப்படுகின்றன. உத்திர பிரதேசத்தில் கொடுக்கப்பட்ட 30 லட்சம் வீடுகளில் 25 லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில் உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Also Read: உ.பியில் 594 கி.மீ நீளமுள்ள கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. போர் விமானங்கள் தரையிறங்கவும் ஏற்பாடு..

முன்னதாக 16 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் சுய உதவி குழுக்களின் வங்கி கணக்குகளுக்கு 1,000 கோடியை மாற்றினார். மேலும் பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட முக்ய மந்திரி கன்யா சுமங்கலா திட்டத்தின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கும் பிரதமர் மோடி உதவித்தொகையை மாற்றினார். பயனாளிகளில் பெரும்பாலானோருக்கு சில காலம் முன்பு வரை வங்கி கணக்கு கூட இல்லாத சிறுமிகள். ஆனால் இன்று டிஜிட்டல் பேங்கிங் வைத்துள்ளனர் என கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.