தி டெல்லி ஃபைல்ஸ், டெல்லி மட்டுமல்லாமல் தமிழ்நாடு பற்றிய பல உண்மைகள் இருக்கும்: விவேக் அக்னிஹோத்ரி

தி டெல்லி ஃபைல்ஸ் திரைப்படத்தில் டெல்லி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல உண்மைகளும் இடம்பெறும் என தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் விவேக் அக்னிஹோத்ரி பேசுகையில், டெல்லி ஃபைல்ஸ் திரைப்படம் தமிழகத்தை பற்றிய பல உண்மைகளை உங்களுக்கு சொல்லும். இது டெல்லியை பற்றியது அல்ல, பல ஆண்டுகளாக டெல்லி எவ்வாறு பாரதத்தை அழித்து வருகிறது என்பதை திரைப்படம் காட்டும் என கூறியுள்ளார்.

மேலும், டெல்லியில் நாட்டை ஆண்ட முகலாய மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை நவீன காலம் வரை அனைத்தையும் எப்படி அழித்தார்கள் என்பது குறித்து படத்தின் கதைகளம் அமையும். வரலாறு, ஆதாரம் மற்றும் உண்மை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அது கதை அடிப்படையில் இருக்க கூடாது.

இந்தியாவில் பிரச்சனை என்னவென்றால், நிறைய பேர் வரலாற்றை கதை அல்லது அவர்களின் அரசியல் மற்றும் இந்தியாவின் அரசியல் அடிப்படையில் எழுதுகிறார்கள் என்பது பெரும்பாலும் மேற்கத்திய மதசார்ப்பற்ற செயல்திட்டமாக உள்ளது என கூறினார்.

மேலும் பெரிய இந்து நாகரீகம் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது மற்றும் நாம் பலவீனமானவர்கள் என்று நம்ப வைக்கப்படுகிறோம். நாம் கற்றுக்கொண்ட அனைத்தும் மேற்கத்திய ஆட்சியாளர்களிடமிருந்தும் அல்லது படையெடுப்பாளர்களிடம் இருந்தும் தான் என்பது முற்றிலும் தவறானவை.

Also Read: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண் பிரதமர் மோடிக்கு கண்ணீருடன் கோரிக்கை..!

1984 இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம், முழு பஞ்சாப் பயங்கரவாத சூழலையும் கையாண்ட விதம் மனிதாபிமானமற்றது மற்றும் அது முற்றிலும் வாக்கு வங்கி அரசியலில் இருந்து வந்தது அதனால் தான் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் பயங்கரவாதம் வளர்க்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டு, முதலில் அவர்கள் உருவாக்கினார்கள், பிறகு அழித்தார்கள், பிறகு ஏராளமான அப்பாவி மக்களை கொன்று மூடி மறைத்தார்கள். இன்று வரை நீதி கிடைக்கவில்லை. அதைவிட மோசமானது என்ன இருக்க முடியும் என அக்னிஹோத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: இஸ்ரேல் உடனான உறவை இந்தியா கைவிட வேண்டும்: கம்யூனிஸ்ட் தீர்மானம்

மக்களுக்கு வரலாறு கற்பிக்கப்பட்டால், உண்மைகளை மக்களுக்கு சொன்னால், மக்கள் எழுந்து நிற்கிறார்கள், நீதியை தேடுகிறார்கள். அப்போது அரசாங்கங்கள் வளைந்து விடும் என தெரிவித்துள்ளார். மார்ச் 11 அன்று வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் 350 கோடி ரூபாய் வசூலித்து வரலாறு சாதனை படைத்தது.

Leave a Reply

Your email address will not be published.