அஜித்தோவல் தலைமையில் முதல் சர்வதேச உளவுத்துறை தலைவர்கள் சந்திப்பு..?

டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் (MEA) தனது வருடாந்திர ரைசினா உரையாடலை செவ்வாய் அன்று நடத்த உள்ள நிலையில், இன்று இந்தியாவின் முதல் புலனாய்வு முகமை தலைவர்களின் மாநாடு நடக்க உள்ளது. இதில் தேசிய பாதுபாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை வகிப்பார்.

இந்த வருடாந்திர முனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இஸ்ரேல், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த புலனாய்வு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். இந்த மாநாட்டை வெளி உளவு நிறுவனமான ஆராய்ச்சி (R&AW) மற்றும் பகுப்பாய்வு பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) ஏற்பாடு செய்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவைகள் இயக்குனர் டேவிட் விக்னோல்ட் ஆகியேர் வருவதாக இருந்த நிலையில் வெவ்வேறு காரணங்களால் அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் குவாட் நாடுகளின் உளவுத்துறை தலைவர்களின் முதல் சந்திப்பு தடைப்பட்டுள்ளது. CIA இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார். மேலும் அதே வாரத்தில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜெனரல் பட்ருஷேவ் ஆப்கன் பற்றி விவாதித்தார்.

2016 முதல் நடத்தப்படும ரைசினா மாநாடு செவ்வாய் கிழமை தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். ஐரோப்பிய ஆணையத்தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆர்மேனியா, ஆஸ்திரேலியா, கயானா, நைஜீரியா, லிதுவேனியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், நார்வே, லக்சம்பர்க், நெதர்லாந்து, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், 90 நாடுகள் மற்றும் பலதரப்பு அமைப்புகளை சேர்ந்த சுமார் 200 பேச்சாளர்களும் பங்கேற்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடித்ததில் 33 பேர் உயிரிழப்பு..? எச்சரித்த தாலிபான்..

இந்த மாநாட்டின் நோக்கம் ஏஜென்சிகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துவது ஆகும். ரைசினா உரையாடலை போலவே இன்று நடைபெறும் உளவுத்துறை தலைவர்கள் கூட்டம், உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள், உயிரிழப்புகள், அணு மற்றும் இரசாயன உயிரியல் போர் அச்சுறுத்தல் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.

மேலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு அச்சுருத்தல், மோடி அரசாங்கம் ரஷ்யாவை நேரடியாக விமர்சிக்க மறுப்பது, ரஷ்யாவுடன் வர்த்தகம், பணம் செலுத்தும் வழிமுறைகளை தொடர்ந்து விவாதிப்பது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க பொருளாதார தடைகளை தவிர்ப்பது ஆகியவை பற்றி விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Also Read: இந்திய விமானப்படைக்கு மேலும் 114 மல்டி ரோல் போர் விமானங்கள்..? உள்நாட்டில் தயாரிக்க முடிவு..

இதேபோல் ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் 70 நாடுகளை சேர்ந்த மூத்த புலனாய்வு பிரதிநிதிகள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்கால பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது பாகிஸ்தானும் கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு உரையாடலை தொடங்கியது. இரண்டாவது வருடாந்திர மாநாடு ஏப்ரல் 1-2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த மாநாடு பற்றிய மேலும் தகவல்கள் வெளிவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published.