ஹைதியில் அமெரிக்க கிறிஸ்துவ மிஷினரிகள் கடத்தல்.. பதற்றத்தில் உலக நாடுகள்.

கரிபியன் நாடான ஹைடியில் 18 கிறிஸ்துவ மிஷினரிகள் கடத்தப்பட்டுள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட 17 கிறிஸ்துவ மிஷினரிகள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடாவை சேர்ந்தவர்.

ஹைதி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கே உள்ள டைட்டானியத்தில் உள்ள ஒரு அனாதை இல்லத்திற்கு மிஷினரிகள் சனிக்கிழமை அன்று பயணித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் ஹைதி கிளர்ச்சி குழுவை சேர்ந்ததாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களில் 5 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உட்பட ஒரு கனடா நாட்டு குடிமகனும் இருந்துள்ளார். கடத்தப்பட்டவுடன் அதில் உள்ள ஒருவர் அமெரிக்காவுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்ததாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து ஹைதி நாட்டு அதிகாரிகள் ஹைதி கிளர்ச்சியாளர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க அதிகாரிகளும் ஹைதி அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். ஹைதியில் தொடர்ந்து போராட்டம், வன்முறை அதிகரித்து வருகிறது.

Also Read: சீனாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட உய்கூர் முஸ்லிம் இன பெண்..

பல ஆண்டுகளாக வறுமையில் சிக்கி தவிக்கும் நாடு ஹைதி. இங்கு உள்ள மக்கள் 90 சதவீதம் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். கடந்த ஜூலை மாதம் ஹைதியில் அந்நாட்டு அதிபர் ஜொவினெல் மொய்சே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடம்பில் 12 தோட்டாக்கள் பாய்ந்தது. இந்த சம்பவம் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: கிர்கிஸ்தான் நாட்டிற்கு ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்.. ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து விவாதிப்பு..

இதனை அடுத்து அந்நாட்டு காவல்துறை 28 பேர் கொண்ட வெளிநாட்டு கூலிப்படை அதிபரை கொலை செய்ததாக கூறியுள்ளது. அதில் இருவல் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டனர். மீதம் உள்ளவர்களில் 15 பேர் கொலம்பியா நாட்டை சேர்ந்தவர்கள். இந்த 15 பேரில் ஒருவர் இராணுவ வீரர் ஆவார். 2 பேர் ஹைதி அமெரிக்கர்கள் என போலிசார் தெரிவித்தனர்.

அதிபரின் கொலையை தொடர்ந்து அங்கு வறுமை மற்றும் வன்முறை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் 18 கிறிஸ்துவ மிஷினரிகள் கடத்தப்பட்டுள்ளனர்.

Also Read: பின்னடைவில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.. திட்டத்தை ரத்து செய்யும் நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.