சீனாவை விட்டு வெளியேறும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம்..

தென்கொரியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் சீனாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த இடத்தை சீன அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் சாம்சங் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளது.

சீனாவின் ஜெஜியாங் மகாணத்தில் நிங்போ மற்றும் ராங்செங் ஆகிய இரு இடங்களில் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிங்போ ஆலையை மூடுவதாக சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிங்போ நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் கப்பல்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. சாம்சங் நிறுவனம் ஆண்டுக்கு 2 லட்சம் டன் வரை கப்பல் கட்டப்படுவதாக கூறியுள்ளது. இந்த நிலையில் நிறுவனத்தை மூட உள்ளதாக வெளியான தகவலை அடுத்து ஊழியர்கள் நிறுவனம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவனம் சார்பில் கொரோனா தொற்று காரணமாக கடுமையான சரிவை சந்தித்ததால் நிறுவனத்தை மூட உள்ளதாக கூறியிள்ளது. மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு N+3 இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் இரசாயன தொழிலை ஊக்குவித்து வருகிறது. இரசாயன தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் சாம்சங் நிறுவனத்தின் நிங்போ ஆலை அமைந்துள்ள 200 ஏக்கர் நிலங்களை வாங்க தயாராக உள்ளனர்.

நிங்போ ஆலையை மூடுவதை தடுக்க சாம்சங் நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் சில சிக்கல்கள் காரணமாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. நிங்போ ஆலையின் இடத்தை இரசாயன நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை சீன அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சாம்சங் மட்டும் இல்லாமல் எல்லா தென்கொரிய நிறுவனங்களும் சீனாவை விட்டு வெளியேற் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக கூறப்படுவது, தென்கொரிய அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது தான் என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீனா தென்கொரிய பொருட்களை புறக்கணிக்கும் இயக்கத்தை ஆதரித்தது.

இதனால் சீனாவில் பல்பொருள் அங்காடி வணிகத்தில் ஈடுபட்டு வரும் தென்கொரியாவின் லோட்டோ நிறுவனம் பலத்த அடிவாங்கியது. ஏனெனில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பு லோட்டோ குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Also Read: சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..

தென்கொரிய நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்பு அலை, அமெரிக்கா சீனா இடையேயான வர்த்த போர் ஆகியவற்றின் காரணமாக அனைத்து தென்கொரிய நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தென்கொரிய அரசு கப்பல் கட்டும் தொழில் துறையை புதுப்பிக்க உள்ளது.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..

ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டேவூ ஷிப் பில்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களை ஒன்றினைத்து உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளது. தென்கொரியாவின் பொருளாதாரம் சீன சந்தையை நம்பி இருந்தாலும் அனைத்து தென்கொரிய நிறுவனங்களும் சீனாவை விட்டு வெளியேற உள்ளன. ஏற்கனவே ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் தென்கொரிய நிறுவனங்களும் வெளியேற உள்ளது சீனாவுக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

Also Read: இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

Leave a Reply

Your email address will not be published.