தலைமை நீதிபதியுடன் சந்திப்பை நடத்துமாறு குடியரசு தலைவருக்கு சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தல்..

நுபுர் சர்மா குறித்து நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்த கருத்துக்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுடன் ஒரு கூட்டத்தை கூட்டுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், உதய்பூர் கொலைக்கு முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தான் காரணம் என குற்றம் சாட்டினார். நுபுர் சர்மாவின் தளர்வான நாக்கு முழு நாட்டையும் தீக்கரையாக்கி விட்டதாகவும், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

நாடு முழுவதும் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளை அனைத்தையும் டெல்லிக்கு மாற்றகோரி நுவுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது, சூர்ய காந்த் இந்த கருத்தை தெரிவித்து இருந்தார். மேலும் நுபுர் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்த காந்த், அவர் நீதித்துறையின் அடிப்படை உரிமையை இழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம், தலைமை நீதிபதி உடன் ஒரு கூட்டத்தை கூட்டுமாறு குடியரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்ட உரிமைகள் மன்றம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கி, இந்திய நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியின் நியாத்தின் மீதான அதன் நம்பிக்கையை அழித்துள்ள ஜே.எஸ்.சூர்யா காந்த் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக மாண்புமிகு தலைமை நீதிபதியுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் மாண்புமிகு குடியரசு தலைவரை வலியுறுத்தியது.

மேலும் தேவையற்ற கருத்துக்களை நீக்குமாறு தலைமை நீதிபதியை வலியுறுத்துமாறும், முந்தைய அவரது மதிப்புமிக்க பரிந்துறைகளை மீண்டும் வலியுறுத்துமாறும், நீதிமன்ற அறைகளில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் நீதிபதிகள் மிகுந்த விவேகத்தை கடைப்பிடிக்க வேண்டியதும் கடமை என மன்றம் கூறியுள்ளது.

One thought on “தலைமை நீதிபதியுடன் சந்திப்பை நடத்துமாறு குடியரசு தலைவருக்கு சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தல்..

  • July 4, 2022 at 11:22 am
    Permalink

    A country with a close ally like Putin, will only follow Putin’s tactics; and Putin’s tactics are well known to achieve what Putin wants. Only difference is that Putin does things in the open, whereas in India things are done by proxy.

    Reply

Leave a Reply

Your email address will not be published.