சிங்கப்பூரை மலேசியா அரசு உரிமை கோர வேண்டும்: முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, சிங்கப்பூர் ஒரு காலத்தில் ஜொகூருக்கு சொந்தமானது என்றும், சிங்கப்பூரை மலேசியாவிற்கு திருப்பி தருமாறு ஜொகூர் அரசு உரிமை கோர வேண்டும் என கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெயர் போன 96 வயதான முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, ஞாயிற்று கிழமை சிலாங்கூரில் பல அரசு சாரா அமைப்புகளால் மலாய் சர்வைவல் மெலாயு காங்கிரஸ் என் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய லாங்காவியின் எம்.பியான மகாதீர், சிங்கப்பூர் மலேசியாவின் ஜொகூர் மாகாணத்திற்கு சொந்தமானது, ஜொகூர் அரசு சிங்கப்பூரை உரிமை கோர வேண்டும் என கூறியுள்ளார். இருப்பினும் சிங்கப்பூருக்கு எந்த கோரிக்கையும் இல்லை. அதற்கு பதிலாக சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் இந்த புதிய நாட்டின் தலைமைக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

சர்வதேச நீதிமன்றத்தில் இந்தோனேசியாவுக்கு எதிராக போர்னியோவுக்கு அருகில் உள்ள சிபாடன் மற்றம் லிஜிடன் தீவுகளின் மீதான கட்டுப்பாட்டை வென்றதை மலேசிய அரசாங்கம் மிகவும் மதிப்பு மிக்கதாக கருதுகிறது. அதேநேரம் பெட்ரா பிரான்கா தீவை சிங்கபூருக்கு விட்டுகொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெட்ரோ பிரான்கா தீவை எங்களிடம் திருப்பி தர வேண்டும் என்று நாம் கோருவது மட்டுமல்லாமல், சிங்கப்பூரையும் ரியாவ் தீவுகளையும் நாம் கோர வேண்டும். ஏனெனில் அது மலாய் நிலம் என மகாதீர் கூறினார். மலாய் நிலம் என்பது, தெற்கு தாய்லாந்தில் உள்ள கிராவின் இஸ்த்மஸ் முதல் ரியாவ் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் வரை பரவியிருந்தது. ஆனால் தற்போது மலாய் தீபகற்பத்தில் மட்டுமே உள்ளது.

மலாய் தீபகற்பம் எதிர்காலத்தில் வேறு யாருக்காவது சொந்தமாக இருக்குமா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். மலேசியா இன்று மலாய்க்காரர்களுக்கு சொந்தமானது அல்ல, ஏனென்றால் மலாய்க்காரர்கள் ஏழைகளாகவே உள்ளனர். அவர்கள் தங்கள் நிலங்களை விற்க முனைகிறார்கள்.

Also Read: பஞ்ச்ஷிரில் தாலிபானின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தேசிய எதிர்ப்பு முன்னணி..!

கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று கொள்ளுமாறு கூறிய மகாதீர், நாம் தவறு செய்ததாக கண்டால், எங்கள் நிலம் மலாய் நிலமாக இருக்கும் வகையில் இந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என கூறினார். 2002 ல் சர்வதேச நீதிமன்றம், சிபாடான் மற்றும் லிகிடான் மலேசியாவிற்கு சொந்தமானது என்றும் இந்தோனேசியாவிற்கு சொந்தமானது அல்ல என தீர்ப்பளித்தது.

Also Read: மின்தட்டுப்பாடு காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூட இலங்கை அரசு உத்தரவு..?

2008ல் பெட்ரா பிராங்கா சிங்கப்பூருக்கு சொந்தமானது என்றும், அருகில் உள்ள மத்திய பாறைகள் மலேசியாவிற்கு சொந்தமானது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய 2017 ல் மலேசியா சர்வதேச நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தது. பின்னர் மே 2018 ஆம் ஆண்டு மகாதீர் மீண்டும் பிரதமரான பிறகு இந்த நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவித்தார்.

Also Read: பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் குறைவாக தேநீர் அருந்த வேண்டும்: பாகிஸ்தான் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published.