அடுத்த தலாய்லாமா தேர்ந்தெடுப்பு..? சீனாவிற்கு முடிவு கட்டும் மங்கோலியா..?

புத்த மத நாடான திபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், தற்போது புதிய பிரச்சனையாக மற்றொரு புத்த நாடான மங்கோலியா சீனாவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. புத்த மதம் அங்கு வளர்ந்து வரும் நிலையில் மங்கோலியா எதிர்காலத்தில் சீனாவிற்கு அச்சுருத்தலாக இருக்கும் என கூறப்படுகிறது.

சீனா திபெத்தை ஆக்கிரமித்ததில் இருந்து புத்த மத தலைவரான தலாய்லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மங்கோலியாவுக்கு சென்றபோது, தலாய்லாமா, பஞ்சன் லாமாவுக்கு பிறகு மூன்றாவது மிக முக்கியமான லாமாவாக கருதப்படும் ஜெப்சுந்தம்பா குடுக்டு மங்கோலியாவில் பிறந்ததாக அறிவித்தார்.

புத்த மதத்தின் ஒன்பதாவது ஜெப்சுந்தம்பா குடுக்டு 2012 ஆம் ஆண்டு இறந்த நிலையில், 14வது தலாய்லாமா மங்கோலியாவில் அடுத்த குடுக்டுவை தேர்ந்தெடுக்கும் சக்தியை பெற்றுள்ளார். குடுக்டுவை அடையாளம் காணும் செயல்முறை கடந்த 2016 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.

குடுக்டு மங்கோலியாவில் பிறந்ததாக தலாய்லாமா அறிவித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது சீனாயே தலாய்லாமா, பஞ்சன் லாமா மற்றும் ஜெப்சுந்தம்பா குடுக்டுவை தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால் அதனை புத்த மக்கள் ஏற்கவில்லை.

இரண்டாவது பஞ்சன் லாமாவான பஞ்சன் எர்டெனி என்பவர் ஏற்கனவே தர்மசாலாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் பஞ்சன் எர்டேனி சில ஆண்டுகளுக்கு முன் சீனாவால் கடத்தப்பட்டார். தலாய்லாமாவின் சொந்த வாரிசும் சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மங்கோலியாவில் ஜெப்சுந்தம்பா குடுக்டுவை வளர விட்டால் அது தனக்கு மங்கோலியா மற்றும் திபெத்தில் ஆபத்தை விளைவிக்கும் என உணர்ந்த சீனா குடுக்டுவை தேடி வருகிறது. திபெத்தை போல் சீனா மங்கோலியாவின் ஒரு பகுதியியையும் ஆக்கிரமித்து மங்கோலிய இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மங்கோலியாவில் புத்த மதத்தை அகற்றும் வேலையில் சீனா இறங்கியுள்ளது. மங்கோலியா மக்களிடம் புத்தம் உங்களின் மதம் கிடையாது என கூறி கம்யூனிச சித்தாந்தத்தை விதைத்து வருகிறது. மங்கோலியாவில் சீனா புத்த மதத்தை நசுக்க நினைக்கையில் மங்கோலிய அரசு அதனை பாதுகாக்க நினைக்கிறது. 14வது தலாய்லாமா விரைவில் 10வது குடுகுடுவை அடையாளம் கண்டு அதிகாரத்தை வழங்குவார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.